»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூக்கைச் சிந்திக் கொண்டிருக்கிறாராம் சிந்து. அது யாரு சிந்து என்று புருவத்தை உயர்த்துகிறீர்களா?

கடல் பூக்கள், சமுராய் படங்களில் வந்தாரே அந்த மீன்விழியாள்தான் சிந்து. பாரதி ராஜாவின் கையால்குட்டுப்பட்டும் என்ன புண்ணியம் என்று அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாராம் சிந்து.

பெங்களூரில் பிறந்து வளர்ந்த இந்த கேரளத்துக் குட்டி கன்னட சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து 25 கன்னட படங்கள்வரை நடித்தவர் தமிழுக்கு வந்தார் பாரதிராஜா மூலமாக.

கடல் பூக்களில் நல்ல ரோல் கிடைத்தது, தொடர்ந்து வந்த படத்தில் முரளியின் ஜோடியாக மறுபடியும் நடித்தார்.இருப்பினும் அதைத் தொடர்ந்து ஒன்றையும் காணவில்லை.கொஞ்ச நிாளைக்குப் பிறகு விஜய்யின் யூத் படத்தில்அவரது மாமா மகளாக நடித்தார். பின்னர் சமுராயில் ஹீரோயின் என்றாலும் கூட படம் ஓடாததால் வாய்ப்புக்கள்இல்லாமல் தவித்து வருகிறார்.

தமிழில் தனக்கு சரியான வாய்ப்பு வரவில்லை என்பதை உணர்ந்து, தெலுங்குப் பக்கம் போனார், அங்கும் தங்கச்சி,அத்தாச்சி என வேடங்கள் வரவே, கடுப்பாகிப் போய் கன்னடத்துப் பக்கம் ஒதுங்கினார். அங்கும் சரிப்படவில்லை.

இப்போது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார். என்னிடம் என்ன இல்லையென்று இப்படி எல்லோரும்டபாய்க்கிறார்கள். சூப்பர் ஹீரோயினாக வேண்டிய "அத்தனை" தகுதியும், "நேர்த்தியும்" என்னிடம் இருந்தும்இப்படிச் செய்வது நியாயமா? என்று வருகிறவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பேசாமல் ம்தாஜ் லெவலுக்குப் போய் விடலாமா என்று கூட எக்ஸ்ட்ரீமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil