»   »  சிந்துவின் தேடல் படலம்

சிந்துவின் தேடல் படலம்

Subscribe to Oneindia Tamil

சுள்ளான் மூலம் தமிழில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே ஓவராக கவர்ச்சிய காட்டிய சிந்து துலானிக்கு தமிழில் சுத்தமாக வாய்ப்பில்லை.

இதனால் மீண்டும் தெலுங்குத் திரையுலகுக்கே போய்விடத் திட்டமிட்டுள்ளார்.

அத்தோடு சொந்த ஊரான மும்பையிலும் இந்திப் படங்களில் வாய்ப்புக்களைப் பிடிக்க கடுமையான முயற்சித்து வருகிறார்.

சுள்ளான் படத்தில் தனுசுடன் இவர் காட்டிய வேகத்தைப் பார்த்து தமிழில் அவருக்கு பல பட வாய்ப்புக்கள் வந்தன.

சிலம்பரசனுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை உதறும் அளவுக்கு இவருக்கு பல சான்ஸ்கள் கிடைத்தன. சுள்ளான் ரிலீசானவுடன் 3தயாரிப்பாளர்கள் வந்து சின்ன தொகையாக அட்வான்ஸையும் திணித்துவிட்டுப் போனார்கள். ஆனால், மீண்டும் யாரும் திரும்பி வரவேஇல்லை.

காரணம், சுள்ளானின் படுதோல்வி. தெலுங்கிலும் முன்பு இவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் ராசியைக் காரணம் காட்டிஒதுக்க ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம்.

இந்த ராசி செண்டிமென்டை உடைக்க இவ்வளவு காலமும் முயன்று பார்த்தார் சிந்து. எதுவும் ஒர்க்-அவுட் ஆகவில்லை. இதனால்அறிமுகமான தெலுங்கு உலகுக்கே போய் தனது இளமையைக் கட்டவிழ்த்துவிடும் மூடில் இருக்கிறார்.

சான்ஸ் இல்லாம இப்படி ஆகிப் போச்சே என்று சிந்துவிடம் கேட்டால், நீங்கள் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.. நான் பி.ஏ. சோஷியாலஜிபடிக்கிறேன். எக்ஸாம்ஸ்க்கு ரெடியாகுறேன். எக்ஸாம் முடிஞ்சதும் வாங்கன்னு நான் தான் தயாரிப்பாளர்களை திருப்பி அனுப்பினேன்.கூடிய சீக்கிரம் என்னை மறுபடியும் தமிழ் சினிமாவுல பாப்பீங்க என்றார்.

தெலுங்கிலும் இந்தியிலும் உங்கள் ஆல்பங்களைத் தூக்கிக் கொண்டு மீடியேட்டர்கள் சான்ஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே என்றுகேட்டால், எக்ஸாம் முடிஞ்ச பின்னாடி நடிக்கத்தானே போறேன், அதுக்குக்கு தான் என்றார்.

குப்புற விழுந்தாலும் மீசையில... என்பார்களே அது இதே தான்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil