கருணாஸ் மனைவிக்கு ஏன் இந்த விபரீத ஆசை.. டிரெஸ்ஸுக்குள்ள ஐஸை கொட்டி.. எதுக்குன்னு பாருங்கஸ
சென்னை: பாடகியும், நடிகையுமான கிரேஸ் கருணாஸுக்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிரேஸ், உடல் எடையை குறைக்க விளையாட்டுத் தனமாக ஒரு விஷயத்தை செய்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அவரை கேலி செய்து வருகின்றனர்.
1970ம் ஆண்டு பிறந்த கிரேஸூக்கு சிறு வயதிலேயே பாடல்கள் மீது ஆர்வம் இருந்ததால், தனது 5 வயதிலேயே, பூந்தமல்லியில் உள்ள CSI சர்ச்சில் பாடகர் குழுவுடன் இணைந்து பாடினார். அதைத்தொடர்ந்த கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கிரேஸ் பாடி உள்ளார். அந்த விழாவில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு, இவர் பாடலை கேட்டு ரசித்து பாராட்டி உள்ளார். அப்போதில் இருந்து இருவரும் நல்ல நண்பர்களாக பழகி பின் நாளில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கிரேஸ் கருணாஸ்: அதன் பிறகு தான் நடிகர் கருணாஸ், கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா MBBS படத்தில் வரும் "சீனா தானா டோய்" என்ற பாடலை பாடுவதற்கான வாய்ப்பை வாங்கி கொடுத்தார். அதைத் தொடர்ந்து கிரேஸ், தேவதையைக் கண்டேன் படத்தில்,"விளக்கு ஒண்ணு", கற்க கசடற படத்தில் "ஆலப்புழா அம்மணி அல்லோ", ஆறு படத்தில் "பிரியா விடு மாமு", சண்டை படத்தில் "வாடி என் கப்பக் கிழங்கே" போன்ற பாடல்களை பாடி உள்ளார். இவர் பாடகியாக மட்டுமில்லாமல், தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம், கதகளி போன்ற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார். மேலும், விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து இரண்டாம் இடத்தை பெற்றார். அதோடு மட்டுமில்லாமல், அதே தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்.
கிரண்டடிக்கும் ஃபேன்ஸ்: கிரேஸ், கருணாஸ் தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார். கருணாசின் மகன் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தனுஷின் மகனாக முக்கிய ரோலில் நடித்திருந்தார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கிரேஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையை குறைக்கிறேன் என்று விளையாட்டுத்தனமாக செய்ததை வீயோவாக பதிவிட்டுள்ளார். அதில், சமைத்த உணவில் இருக்கும் கொழுப்பை ஐவை வைத்து எடுக்கின்றனர். அதைப்பார்த்த கிரேஸ், தனது வயிற்றில் இருக்கு கொழுப்பை எடுக்க, ஐசை டிரெஸ்ஸுக்குள் கொட்டி அடி வயிற்றை தடவி குறைந்துவிட்டதா என பார்க்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், கிரேஸ் அக்கா, இப்படி செய்தால் எல்லாம் எடை குறையாது என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











