Shruti Narayanan: கழுத்தில் தாலியுடன் ஸ்ருதி நாராயணன்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: ஒரே ஒரு வீடியோ மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி நாராயணன். அது சர்ச்சைக்குரிய வீடியோவாக இருந்தாலும், அந்த வீடியோ தான் ஸ்ருதியை பிரபலமாக்கியது. தற்போது ஸ்ருதி நாராயணன் அந்த சர்சையை மறந்து விட்டு தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், மாலையும் கழுத்துமாக தாலியுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு நடிகையாக வேண்டும் என்பது கனவாக இருந்ததால், விசுவல் கம்யூனிகேஷன் படித்தார். படித்துக்கொண்டு இருக்கும் போதே, கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றினார். பின், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம், மாரி போன்ற சீரியலில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு பெயரை வாங்கிக்கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான்.

siragadikka asai shruthi narayanan
Photo Credit:

ஸ்ருதி நாராயணன்: அண்மையில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில் படவாய்பை பெறுவதற்கான ஆபாசமாக பல விஷயம் இருந்தது. அந்த வீடியோவை பார்த்த பலரும், ஸ்ருதியை கண்டபடி திட்டினார்கள். இதுகுறித்து பேசிய ஷாகிலா சினிமா வாய்ப்புக்காக இப்படி தரம் தாழ்ந்து அந்த பெண் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது. முதலில் சினிமாவில் இப்படி ஆடிஷன் நடக்கவே நடக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்கள் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என ஷகிலா, ஸ்ருதி நாராயணனை விளாசி இருந்தார்.

கழுத்தில் தாலியுடன் ஸ்ருதி: இப்படி ஒட்டுமொத்த ஊடகமும் ஸ்ருதியை கண்டபடி விமர்சனம் செய்து வந்த போதும், அதுபற்றி கவலைப்படாத ஸ்ருதி, அது நான் இல்லை AI வீடியோ என விளக்கம் கொடுத்தார். பின் அந்த சர்ச்சையில் இருந்து மீண்டு வந்து, நடிப்பின் மீது கவனத்தை செலுத்தி வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராமில் கழுத்தில் தாலியுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் ஸ்ருதி கல்யாணம் ஆகிவிட்டதா வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர். ஆனால், இது ரியல் கல்யாணம் இல்லை ரீல் கல்யாணம் அதாவது, ஸ்ருதி தற்போது, சிறகடிக்க ஆசை சீரியலில் , வித்யா கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் தான் அவருக்கு கல்யாணம் நடந்துள்ளது.

சீரியலில் வித்யாவும், முருகனும் காதலித்து வந்த நிலையில், கடந்த எபிசோடில் முருகனிடம் ரோஹிணி பணம் கேட்டார். இதற்கு வித்யா சண்டை போட்டதால் இவர்களின் திருமணம் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் நினைத்துஇருந்த நிலையில், தற்போது வித்யா - முருகன் கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது. சிறகடிக்க சீரியல் கல்யாண போட்டோவைத்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி நாரயணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X