»   »  சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை!

சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை! #SK13

சென்னை: பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தை முடித்த பிறகு, 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ட்ரைக் முடிந்ததும் ஷூட்டிங் வேலைகள் துவங்க இருக்கின்றன.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ரகுல் பிரீத் சிங் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

பொன்ராம் இயக்கும் 'சீமராஜா' படத்தை முடித்த பிறகு, 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் பட வேலைகள் துவங்காமல் உள்ளது.

அடுத்த வருடம் ரிலீஸ்

அடுத்த வருடம் ரிலீஸ்

இந்தப் படத்தை சிவகார்த்திகேயனின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இந்தp படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயின்

இப்படத்தின் ஹீரோயினாக ரகுல் பிரீத் சிங் நடிப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கார்த்தியுடன் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து மூன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் கமிட்டாகி இருக்கிறார் ரகுல்.

English summary
After completing the film 'Seemaraja', Sivakarthikeyan acts in Ravikumar's direction. AR Rahman composes music for this film. In this situation, Rakul preet singh to act as heroine in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X