»   »  ஹன்சிகாவைத் தொடர்ந்து சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார் சிவகார்த்திகேயன் ?

ஹன்சிகாவைத் தொடர்ந்து சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார் சிவகார்த்திகேயன் ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தன் வாழ்க்கையைத் தொடங்கி, நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்ட ஹீரோவாகத் திகழ்கிறார் சிவகார்த்திக்கேயன்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கிச்சட்டை'. இப்படத்திற்கு பிறகு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' பட இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்' என்ற படத்தில் அவர் நடித்துளார். இந்த படத்தில் புதுமுக நடிகை கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மான்கராத்தே...

மான்கராத்தே...

சினிமாவில் அறிமுகமான புதிதில் ஓவியா, பிரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா என வளர்ந்து வரும் நாயகிகளுடன் ஜோடியாக நடித்தார் சிவகார்த்திக்கேயன். மான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் ஜோடியானார்.

நயன்தாரா இல்லனா ஸ்ரீதிவ்யா...

நயன்தாரா இல்லனா ஸ்ரீதிவ்யா...

பிறகு, ‘காக்கிச்சட்டை' படத்தில் முதலில் நயன்தாராவைத்தான் இவருக்கு ஜோடியாக்க எண்ணினர். ஆனால், சிலப்பல காரணங்களால் ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த வாய்ப்பு போனது.

சமந்தா தான் வேணும்...

சமந்தா தான் வேணும்...

இந்நிலையில், தனது அடுத்த படத்தில் சமந்தா தான் நாயகியாக வேண்டும் என சிவகார்த்திக்கேயன் தயாரிப்பு தரப்பில் கண்டிஷன் போட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இது தான் காரணம்...

இது தான் காரணம்...

சமந்தாவிற்கும் கத்தி தவிர தமிழில் சொல்லிக் கொள்வது போல் வெற்றிப்படம் அமையவில்லை. சமந்தா தற்போது சூர்யாவுடன் ‘24', தனுஷ் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், தொடர்ந்து வெற்றிப்படம் கொடுத்து வரும் சிவகார்த்திக்கேயனுடன் ஜோடி சேர்ந்தால் தமிழில் தனக்கு மேலும் ஒரு வெற்றிப்படம் அமையும் என அவர் மனக்கணக்கு போடுவதாகவும் நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Sivakarthikeyan one of the most talented mimicry artist turned VJ and now a successful actor. Interestingly the talks are going on about his next movie and mostly its heard that Sivakarthikeyan pairs up with Samantha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil