»   »  ஜிம்மிலேயே கிடந்து உடல் இளைத்த இஞ்சி இடுப்பழகி!

ஜிம்மிலேயே கிடந்து உடல் இளைத்த இஞ்சி இடுப்பழகி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் நடித்த அனுஷ்கா, அந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை கணிசமாக அதிகப்படுத்தினார்.

ஆனால், அதையடுத்து பாகுபலி-2 படத்திற்காக அவரால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் குண்டான அனுஷ்காவை வைத்தே படப்பிடிப்பை தொடங்கினர்.
ஆனால் அதையடுத்து அவரைத்தேடி சில புதிய படவாய்ப்புகள் வந்தபோது அவர் ஏற்கவில்லை. 'எனது உடல் எடையை கணிசமான அளவு குறைத்து ஸ்லிம்மான பிறகுதான் இனிமேல் புதிய படங்களில் கமிட் ஆவேன்' எனச் சொல்லிவந்தார் அனுஷ்கா.

 வீட்டிலேயே ஜிம்

வீட்டிலேயே ஜிம்

அதைத் தொடர்ந்து, ஐதராபாத்திலுள்ள தனது வீட்டிற்குள்ளேயே ஒரு அதிநவீன உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்கிய அனுஷ்கா, ஒரு பயிற்சியாளர் மூலமாக தினமும் எட்டு மணிநேரம் உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார்.

 செம ஸ்லிம்

செம ஸ்லிம்

இதுபோல கடுமையாக செய்து வந்த உடற்பயிற்சி தற்போது பலன் கொடுத்துள்ளதாம். பல மாதங்களாக செய்த உடற்பயிற்சியின் பலனாக தற்போது அவர் ஸ்லிம்மாகி விட்டார்.

 அடடே நீங்களா

அடடே நீங்களா

அதையடுத்து சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள வந்தபோது, அனுஷ்காவின் ரசிகர்களும், நண்பர்களும் அவரது ஸ்லிம் ரகசியத்தைக் கேட்டறிந்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினர்.

 தெலுங்கு டைரக்டரை கூப்பிட்டு

தெலுங்கு டைரக்டரை கூப்பிட்டு

இந்தநிலையில், உடல் எடையைக் குறைத்த பிறகுதான் புதிய படங்களில் கையெழுத்திடுவேன் என்பதில் உறுதியாக இருந்துவந்த அனுஷ்கா, தற்போது தன்னிடம் கதை சொல்லிக் காத்திருந்த ஒரு தெலுங்கு டைரக்டரை அழைத்து அந்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

English summary
Anushka has significantly increased her body weight for the role of 'Inji iduppazhagi'. Now, She exercised in gym and reduced her body weight.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil