»   »  ப்ரீயா இருக்கேன்.. பீச்சுக்குப் போனேன்.. போட்டோ போட்டு அச்ததும் "ஒல்லி கில்லி" இலியானா

ப்ரீயா இருக்கேன்.. பீச்சுக்குப் போனேன்.. போட்டோ போட்டு அச்ததும் "ஒல்லி கில்லி" இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை இலியானா சும்மா இருந்தாலும் சரி, ஷூட்டிங்கில் இருந்தாலும் சரி அந்த இடத்தை ரசனையாக்கி விடுவாராம். சும்மா இருக்கவே மாட்டாராம்.

இப்போதும் அப்படித்தான், ஷூட்டிங் இல்லை. காதலரைக் கூட்டிக் கொண்டு ஒரு அழகான சுற்றுலாத் தலத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டு புகைப்படமாக எடுத்து, அதனை தனது சமூகவலைதளப் பக்கங்களில் வெளியிட்டு அசத்தி வருகிறார்.

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் இலியானா. இதே படத்தில் தான் தமன்னாவும் அறிமுகமானார். ஆனால், அடுத்தடுத்து தமன்னாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமைய, தெலுங்குப் பக்கம் போனார் இலியானா.

நண்பன்...

நண்பன்...

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் மீண்டும் தமிழில் விஜய்யுடன் நண்பன் படத்தில் அசத்திய இலியானா தெலுங்கில் ஹாட்டான நாயகியாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் வரவே அங்கு தாவினார்.

ரெஸ்ட்...

ரெஸ்ட்...

ஆனால், தற்போது இவருக்கு முன்பு போல தெலுங்கிலோ, பாலிவுட்டிலோ பட வாய்ப்புகள் இல்லை. எனவே இப்போது அவருக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைக்கிறது.

ஊர் சுற்றும் அழகி...

ஊர் சுற்றும் அழகி...

ஷூட்டிங் இல்லை என்பதற்காக அவர் சும்மா இருப்பதில்லை. மாறாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். தற்போது தனது காதலருடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம் இலியானா.

காதலருடன் டூர்...

காதலருடன் டூர்...

இலியானா ஆண்ட்ரூ நீபோன் என்பவரைக் காதலித்து வருகிறார். அவர் ஒரு புகைப்படக் காரர். இருவரும் சேர்ந்து சமீபத்தில் பெயர் குறிப்பிடாத ஒரு தீவுப் பகுதிக்குப் போயுள்ளனர்..

விதவிதமான போஸ்கள்...

விதவிதமான போஸ்கள்...

அங்கு கடற்கரையில் புகைப்படங்களை எடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார் போன். அத்தனையும் இலியானாவைத்தான். அவரும் விதம் விதமாக போஸ் கொடுத்து அசத்துகிறார்.

பீச் ஹேர்...

பீச் ஹேர்...

இந்தப் புகைப்படங்களையெல்லாம் இலியானா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர், பேஸ்புக் என சகலத்திலும் போட்டுக் கொண்டிருக்கிரார். ஒரு படத்தில் பீச் ஹேர்.. டோன்ட் கேர் என்று போட்டுள்ளார் இலியானா.

பிகினி...

பிகினி...

இலியானாவை விதம் விதமாக பார்க்க ரசிகர்களுக்கு கசக்குமா என்ன.. அதிலும் பிகினி உடையில் கலக்கல் கவர்ச்சியில் இலியானா கண்ணைப் பறிக்கும் வகையில் இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் அவரது டிவிட்டர் பக்கத்தில் மொய்த்துக் கிடக்கின்றனராம்.

English summary
Ileana D'Cruz is one gorgeous actress and she knows that! But it seems like more than anyone, Ileana's boyfriend Andrew Kneebone knows how to capture the gorgeous side of hers in the most beautiful way!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil