பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்... நடிகை ஸ்ம்ருதியின் அழகிய போட்டோஷூட்!

சென்னை : தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ம்ருதி வெங்கட்.

அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து மெகா ஹிட் வெற்றி பெற்ற தடம் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார்.

ஆர் ஜே பாலாஜி,நயன்தாரா இணைந்து நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் அனைவருக்கும் பிடித்த சாதுவான தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற நடிகை ஸ்ம்ருதியின் அட்டகாசமான மொட்டை மாடி போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

சாதுவான தங்கையாக

சாதுவான தங்கையாக

ஆர் ஜே பாலாஜி காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது கதாநாயகனாகவும் இயக்குனராகவும் படு பிஸியாக இயங்கிக் கொண்டுள்ளார். எல்கேஜி வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்தும் இருந்தார். இதில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் அம்மனாக நடித்திருக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த தீபாவளிக்கு ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியின் முதல் தங்கையாக சாதுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கைதட்டல்களையும் பெற்றவர் நடிகை ஸ்ம்ருதி வெங்கட்.

தீர்ப்புகள் விற்கப்படும்

தீர்ப்புகள் விற்கப்படும்

மூக்குத்தி அம்மனுக்கு பிறகு பலராலும் அறியப்பட்ட ஸ்ம்ருதி வெங்கட் இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. மேலும் சத்தியராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் "தீர்ப்புகள் விற்கப்படும்" என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.

முதற்கட்ட ஷூட்டிங்

முதற்கட்ட ஷூட்டிங்

துருவங்கள் பதினாறு,நரகாசூரன் மாஃபியா போன்ற சூப்பர் திரில்லர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் இயக்குனராக உள்ள கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ்,மாளவிகா மோகனன் நடித்துவரும் தனுஷ் 43ல் முக்கிய வேடத்தில் நடிக்க இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முதற்கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது.

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம்

இவ்வாறு தமிழ் சினிமாவில் அடுத்த படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டுள்ள ஸ்ம்ருதி வெங்கட் பார்த்த உடனேயே சுண்டி இழுக்கும் மொட்டை மாடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் எனவும் நீங்க சிங்கிளா எனவும் இதுதான் அழகுல ஆள கொல்றதா என விதவிதமாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X