»   »  ஸ்னேகாவை சொக்க வைத்த தங்கர்

ஸ்னேகாவை சொக்க வைத்த தங்கர்

Subscribe to Oneindia Tamil

தங்கர்பச்சானின் ஸ்டைலும், அவரது திறமையும் என்னைக் கவர்ந்து விட்டன. மீண்டும் அவருடன் இணைந்து இன்னொரு படம் செய்ய ஆசையாக உள்ளேன் என்று கூறியுள்ளார் சினேகா.

தங்கர் பச்சானின் இயக்கத்தில் உருவாகியுள்ள பள்ளிக்கூடம் படத்தில் சினேகாதான் ஹீரோயின். கோகிலா டீச்சர் கேரக்டரில் இப்படத்தில் அசத்தியுள்ளாராம் சினேகா. கிட்டத்தட்ட அந்த கேரக்டராகவே மாறி படத்தில் டீச்சர் வேடத்தில் வாழ்ந்துள்ளாராம்.

கடலோரக் கவிதைகள் வந்த பின்னர் ஜெனீபர் டீச்சர் ஸ்டைல் கொண்டையும், குடையும் ஃபேமஸாகியது போல சினேகாவின் கோகிலா டீச்சர் மேனரிசங்களும், அடையாளங்களும் பிரபலமாகும் என்கிறார்கள்.

பள்ளிக்கூடத்தில் நடித்த அனுபவத்தை சினேகா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். தங்கர் பச்சான் சாருடன் இணைந்து பள்ளிக்கூடத்தில் நடித்தது புது அனுபவம். அவரது ஒர்க்கிங் ஸ்டைல், கதையை உணர்ச்சிகரமாக விவரித்தது, எடுத்தது என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. அதில் மெய் மறந்து போயுள்ள நான் மீண்டும் தங்கருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.

இதுவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் சிறந்த கேரக்டர் என்று நினைக்கிறேன். அனுபவித்து நடித்துள்ளேன். எனது கேரக்டர் ஒரு டீச்சர் கேரக்டர் என்றாலும் கூட, எனக்கு அதிக வசனங்கள் கிடையாது. பாடி லாங்குவேஜ்தான் அதிகம் பேசும்.

அருமையான கிராமத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்தது. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஜாலியாகவும் இருந்தது. இப்படி ஒரு ஆத்மார்த்தமான வாய்ப்பைக் கொடுத்ததற்காக தங்கருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பள்ளிக்கூடத்திற்கு அனுமதி கிடைக்கவில்லையாம். ஆனால் நிச்சயம் தமிழ் ரசிகர்ள் இந்தப் படத்திற்கு அமோக ஆதரவு கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. வர்த்தகரீதியாகவும் பள்ளிக்கூடம் மாபெரும் வெற்றிப் படமாகும் என்றார் சினேகா.

ஆனால் கேன்ஸ் அதிர்ச்சியிலிருந்து தங்கர் இன்னும் மீளவில்லையாம். அப்படி என்ன என் படத்தில் கோளாறு என கோபமாக உள்ளாராம். மேலும் பள்ளிக்கூடம் எப்போது திறக்கும் என்பதும் உறுதியாக தெரியவில்லை.

அதான் கோடை விடுமுறை முடிஞ்சாச்சே, பள்ளிக் கூடத்தை சீக்கிரமே திறந்திட வேண்டியதுதானே?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil