»   »  சினேகா பிசி பிசி ..

சினேகா பிசி பிசி ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

புன்னகை இளவரசி சினேகா கை நிறையப் படங்களுடன், முகம் நிறைய புதுச் சிரிப்புடன், புது வனப்புடன் படு பிசியாக ஓடியாடி நடித்துக் கொண்டிருக்கிறார்.

நாக் ரவிக்கு முன்பு இருந்த சினேகாவுக்கும், அதன் பிறகு உள்ள சினேகாவுக்கும் ஆறு வித்தியாசங்கள் காட்டச் சொன்னால் 60 வித்தியாசங்களைக் கூற முடியும். அந்த அளவுக்கு அடியோடு மாறிப் போயுள்ளார் சினேகா.

முன்பை விட நடிப்பில் புது மெருகேறியுள்ள சினேகா, இப்போது படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் சினேகாவுக்குத் திருப்திகரமான அளவுக்கு படங்கள் உள்ளதாம்.

தமிழில் பள்ளிக்கூடம் படத்தில் சூப்பர் கேரக்டரில் நடித்துள்ள சினேகா, அடுத்து அறுவடை என்ற படத்திலும் அசத்தியுள்ளார். இதில் அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் மம்முட்டி. மலையாளத்திலும் இப்படம் உருவாகிறது.

அடுத்து பிரிவோம் சந்திப்போம் படத்தில் சேரனுடன் மீண்டும் இணைகிறார். முதல் படமான ஆட்டோகிராப்பில் தோழியாக வந்து கலக்கியவர் இதில் ஜோடி போட்டு அசத்துகிறாராம்.

இதுதவிர தெலுங்கில் தாசரி நாராயண ராவின் மகன் அருண் அறிமுகமாகும் புதிய படத்தில் படு அமர்க்களமான ரோலில் கலக்கப் போகிறாராம்.

முன்பை விட படு பொலிவாக காணப்படும் சினேகாவின் புத்தெழுச்சிக்கு அவரது அக்கா கீதாதான் காரணமாம். பழைய சினேகாவாக நான் இருக்கக் கூடாது. புதிதாக தோன்ற வேண்டும், என்ன செய்யலாம் என்று அக்காவிடம் கூறியபோது எனக்காக சில அழகுக் கலை டிப்ஸ்களை அள்ளிப் போட்டார். அத்தோடு நில்லாமல் எனது காஸ்ட்யூமிலும் பல சேஞ்சுகளைச் சொன்னார். ஸோ, எனது புதுத் தோற்றத்திற்கும், பொலிவுக்கும் அக்காதான் காரணம் என்கிறார் தனது அழகுப் பல் வரிசை பளிச்சிட.

பிரிவோம் சந்திப்போம் படத்தில் எனக்கு நல்ல ரோல். இயக்குநர் கரு. பழனியப்பனும், சேரனும் எனக்கு நல்ல நண்பர்கள். எனவே இந்தப் படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வமாக உள்ளேன் என்கிறார் கூடவே.

ஜொலிங்க, ஜொலிங்க...!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil