»   »  நம்பர் ஒன் போட்டியில் த்ரிஷா, ஸ்னேகா

நம்பர் ஒன் போட்டியில் த்ரிஷா, ஸ்னேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
2005ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு மிகவும் விசேஷமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திருட்டு விசிடி ஒழிப்பு, கேளிக்கை வரிக் குறைப்பு என திரையுலககுக்கு சந்தோஷம் தரும் சமாச்சாரங்களுக்கு இடையே வருகிற பொங்கல்தினத்தன்று 10 திரைப்படங்கள் வரை வெளியாகவுள்ளது.

இந் நிலையில் இந்த ஆண்டின் டாப் ஹீரோயின் யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

சிம்ரன் பீல்ட் அவுட்டாகி விட்டார், ஜோதிகா கல்யாண மூடுக்கு வந்து, படங்களைக் குறைத்துக் கொண்டு வருகிறார்.

சோனியா அகர்வால் அவ்வப்போது (செல்வராகவன், தனுஷ் படங்களில் மட்டும்) நடித்து வருகிறார். கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகவைத்துள்ள நமீதா எந்தளவுக்கு வெற்றி பெறப் போகிறார் என்பது தெரியவில்லை.

இந் நிலையில் சிம்ரன் வகித்த முதலிடத்தைப் பிடிக்க ஸ்னேகாவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

2004ம் ஆண்டில் த்ரிஷாவும், ஸ்னேகாவும்தான் அதிக பரபரப்பையும், பெரும் வெற்றியையும் பெற்ற நடிகைகள்.

த்ரிஷாவுக்கு கில்லியும், ஸ்னேகாவுக்கு ஆட்டோகிராப் படமும் பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்தன. த்ரிஷா நடித்தது ஒரே ஒருபடம்தான். இருந்தாலும் கில்லி படம் மூலம் த்ரிஷா விஸ்வரூபமெடுத்தார்.

அதேபோல, ஸ்னேகா நடித்திருந்த ஆட்டோகிராப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அடுத்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில்கமலுடன் ஜோடி சேரும் வாய்ப்பும் ஸ்னேகாவுக்குக் கிடைத்தது. பெயரைப் போலவே படமும் ஓரளவு வசூல்ராஜாவாகவே இருந்தது.

த்ரிஷா, ஸ்னேகா இருவரும்தான் கடந்த ஆண்டின் டாப் ஹீரோயின்களாக இருந்தனர். இந் நிலையில் 2005ல் யார் முதலிடத்தைப் பெறப்போவது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

த்ரிஷா தற்போது தமிழில் அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக தெலுங்குப் பக்கம் தீவிர கவனம் செலுத்துகிறார். ஆனால் ஸ்னேகாவோதெலுங்குப் படங்களை ஒதுக்கி விட்டு தமிழில் அதிக கவனம் செலுத்துகிறார்.

கடந்த ஆண்டு கில்லி ஏற்படுத்திய கலக்கலைப் போல இந்த ஆண்டு திருப்பாச்சி மூலம் த்ரிஷா மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்றஎதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு அடுத்ததாக அஜீத்குமாருடன் நடித்துவரும் ஜி படமும் த்ரிஷாவுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், ஆயுதம் படத்தின் மூலம் ஸ்னேகாவும் கடும் போட்டியைக் கொடுப்பார் என்று தெரிகிறது.

2005ம் ஆண்டின் சூப்பர் ஹீரோயின் என்ற பெயரை த்ரிஷா பிடிப்பாரா அல்லது ஸ்னேகா கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்துப்பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil