twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருநங்கைகளை கேலி செய்யாமல் ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் நடிகை சினேகா.

    By Sudha
    |

    Sneha
    சேலம் : நேருகலையரங்கத்தில் கடந்த 3 நாட்களாக திருநங்கைகளின் சங்கமம் விழா எனும் விழா நடந்தது. இறுதி நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, மிஸ் இந்தியா 2010 தேர்வு நடந்தது.

    இதில் தமிழகம், ஆந்திரம், கேரளா, மும்பை உள்பட பல மாநிலங்களை சேர்ந்த அரவாணிகள் கலந்து கொண்டனர்.

    புடவை, சுடிதார் என விதவிதமான உடைகளில் நடந்து வந்து வியக்க வைத்தனர் திருநங்கைகள். பின்னர் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில், மிஸ் இந்தியா 2010 -ஆக கேரளாவை சேர்ந்த சபீதா(வயது 37) தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு நடிகை சினேகா கிரீடம் வைத்து நினைவு பரிசு வழங்கினார்.

    2-வதுஇடத்தை சேலம் மணிமேகலையும், 3-ம் இடத்தை ரமயாவும் பிடித்தனர்.

    இந்த விழா குறித்தும், திருநங்கைகளின் திறமை குறித்தும் நடிகை சினேகா கூறுகையில், "எனக்கு திருநங்கைகளைப் பிடிக்கும். நான் மும்பையில் பிறந்தவள். நான் சிறுமியாக இருந்த போது எனது தாயார் திருநங்கைகளை அழைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். அவர்களை அழைத்து வந்து உபசரிப்பார்கள்.

    குழந்தைகள் பிறந்தால் திருநங்கைகளை அழைத்து வந்து ஆசி வாங்குவார்கள். திருநங்கைகள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அவர்களது தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும்.

    சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்பட வேண்டும். அவர்களை நாம் கேலி பேசாமல் ஊக்கப்படுத்திட வேண்டும்..." என்றார்.

    விழாவில் வீரபாண்டி ராஜா எம்.எல்.ஏ உள்பட பலர் பங்கேற்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X