»   »  சீரியஸுக்கு சினேகா பிரேக்

சீரியஸுக்கு சினேகா பிரேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sneha
தன்னைச் சுற்றி கதை நகருவது போன்ற கனமான பாத்திரங்களைக் கொண்ட படங்களில் நடிப்பதை சற்றே ஒத்திவைத்திருக்கிறாரம் சினேகா. அதற்குப் பதில் ஜாலியாக ஓரிரு படங்களை செய்ய ஆர்வமாக உள்ளாராம்.

பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் என இரு சீரியஸ் படங்களில் நடித்து விட்ட சினேகா, அதுபோன்ற படங்களுக்கு சற்றே பிரேக் தர தீர்மானித்துள்ளார்.

தன்னைச் சுற்றி நகரும் கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதால் நன்றாக நடிக்க வேண்டுமே, சிறப்பாக வர வேண்டுமே என்று எப்போதும் கவலைப்படும்படியாக ஆகி விடுகிறது. வாழ்க்கையே சீரியஸாகி விட்டது போல தோன்றுகிறது. அதனால்தான் ஜாலியாக சில படங்களில் நடிக்க தீர்மானித்துள்ளேன் என்கிறார் சினேகா.

கொஞ்ச காலத்திற்கு பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் மாதிரியான கனமான படங்களில் என்னைப் பார்க்க முடியாது. சீரியஸாக நடித்துப் போரடித்து விட்டது. தொடர்ந்து இதுபோன்ற ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கவும் முடியாது.

அதனால்தான் ஜாலியாக சில படங்களில் நடிக்கத் தீர்மானித்துள்ளேன். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள பாண்டி படத்தில் எனக்கு படு ஜாலியான கேரக்டர். ஜாலியாக செய்யப் போகிறேன். அதேபோல ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கவுள்ளேன் என்கிறார் ரிலாக்ஸ்டாக.

நடிகைக்கு நடிக்க சலிக்கலாமோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil