»   »  டைட் ஷெட்யூலில் சினேகா

டைட் ஷெட்யூலில் சினேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sneha

சினிமா, டிவி விளம்பரம் என படு பிசியாக ஓடிக் கொண்டிருக்கிறார் சினேகா. அடுத்த ஆண்டு பாதி வரை அவரது கால்ஷீட் டைரி புல்லாக இருக்கிறதாம்.

புதுப்பேட்டைக்கு முன்பு கொஞ்சம் போல தமிழில் டல்லடித்திருந்தது சினேகாவின் மார்க்கெட். புதுப்பேட்டை வந்ததும் கொஞ்சம் போல நிமிர்ந்தார் சினேகா. நிறையப் பட வாய்ப்புகள், அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

தமிழ் தவிர தெலுங்கிலும் சினேகாவுக்கென்ற உள்ள படங்கள் நல்ல இடைவெளியில் வந்ததால் இரு மொழிகளிலும் படு பிசியாக இருந்தார் சினேகா. கூடவே டிவி விளம்பரங்களும் சேர்ந்து கொண்டதால் படு டைட்டாகி விட்டது சினேகாவின் மார்க்கெட்.

இப்போது சினேகா சேரனுடன் பிரிவோம் சந்திப்போம், ஷாமுடன் இன்பா, ராகவேந்திரா லாரன்ஸுடன் பாண்டி என பிசியாக இருக்கிறார். தெலுங்கிலும் 2 படங்களில் நடிக்கவுள்ளார். இதுதவிர டிவி விளம்பரப் படங்களும் நிறையவே இருக்கிறதாம்.

இப்படி படு டைட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சினேகாவால் புதுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதம் வரை கால்ஷீட் கொடுக்க தேதி இல்லையாம். அதன் பிறகுதான் புதுப் படங்களுக்குத் தரமுடியும் என்று கூறி வருகிறாராம்.

ரொம்ப சந்தோஷம் சினேகா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil