»   »  சிவகார்த்திகேயன் - நயன்தாராவுடன் இணையும் சிநேகா!

சிவகார்த்திகேயன் - நயன்தாராவுடன் இணையும் சிநேகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கல்யாணமாகி குழந்தை பெற்றபின் முதல் முறையாக நடிக்க வந்துள்ளார் 'புன்னகை இளவரசி' சினேகா. சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிக்கும் பெயர் சூட்டப்படாத படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

Sneha joins with Nayanthara - Sivaklarthikeyan

இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்க, 24 ஏ எம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கிறார்.

ஏற்கெனவே பாஹத் பாசில், ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் தம்பி ராமையா என பெரிய டீம் படத்தில் இருக்கிறது.

"கவிதை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல... சிறந்த உருவகம், பொருத்தமான சொற்கள் என அனைத்தும் மனதில் இருந்து வர வேண்டும். அது போலத்தான் ஒரு கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதும்... மனதில் அந்த வேடத்தை உள் வாங்கினால் மட்டுமே, அந்த கதாப்பாத்திரத்தை கன கட்சிதமாக திரையில் பிரதிபலிக்க முடியும். அப்படி நடிக்கக் கூடிய ஒரு நடிகை தான் சிநேகா.

Sneha joins with Nayanthara - Sivaklarthikeyan

இந்த படத்தின் கதையை நாங்கள் எழுதும் போதே இந்த கதாப்பாத்திரத்தில் சிநேகாதான் நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம்... சிநேகாவும் எங்கள் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டார்... எங்களின் ஒட்டுமொத்த படக் குழுவினரின் சார்பிலும் அவர்களை அன்போடு வரவேற்கிறோம்...வருகின்ற செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த பெயர் சூட்டப்படாத படத்தின் படப்பிடிப்பை நாங்கள் தொடங்க இருக்கிறோம்...," என்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

Sneha joins with Nayanthara - Sivaklarthikeyan

"சினிமாவில் நான் மீண்டும் காலடி எடுத்து வைக்கும் படம் ஒரு மிகப் பெரிய திரைப்படமாக இருக்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன்... ஆனால் இந்த திரைப்படமோ பிரம்மாண்டத்தின் உச்ச கட்டமாக இருக்கிறது... இப்படிப்பட்ட ஒரு சவாலான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை தேர்வு செய்த இயக்குநர் மோகன் ராஜாவுக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்," என்றார் சிநேகா.

English summary
For the first time actress Sneha is joining with Nayanthara - Sivakarthikeyan in an untitled movie directed by Mohan Raja.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil