»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஸ்னேகாவுக்கு இப்போது கைவசம் ஒரே ஒரு படம் தான் உள்ளது. சேரன் இயக்கி வரும் ஆட்டோகிராப் படத்தில்அவரது ரோல் தொடர்பான சூட்டிங் முடிந்துவிட்டது. இப்போது நடித்து வரும் ஒரே ஒரு படம் ஜனா தான். அஜீத்நடிக்கும் இந்தப் படத்தின் சூட்டிங் அவ்வபோது தான் நடக்கிறது.

கையில் படங்களே இல்லாததால் சமீபத்தில் துபாய்க்குப் போய்விட்டார் ஸ்னேகா. அங்குள்ள தனது சகோதரியின்வீட்டில் தங்கியிருந்துவிட்டு இப்போது தான் ஊர் திரும்பியிருக்கிறார்.

அழகாக இருப்பதோடு, அழகாகவே நடித்தாலும் இவரை தங்களுடன் ஜோடி சேர்க்க இளைய நடிகர்கள் தயங்கிவருவது ஸ்னேகாவை மிகவும் பாதித்திருக்கிறதாம். ஸ்ரீகாந்துடன் தான் இணைத்துப் பேசப்பட்டது தான் இளையநடிகர்களை தன்னிடம் அண்ட விடாமல் செய்துவிட்டதாக ஸ்னேகா நினைக்கிறார்.

இதனால் இப்போது ஸ்ரீகாந்திடம் இருந்து ரொம்பவே விலகி இருக்கிறார் ஸ்னேகா. ஸ்ரீகாந்தும் இப்போதுதெலுங்கில் பிஸியாகிவிட்டதால் ரொம்பவும் நல்லதாய் போய்விட்டது.

ஸ்னேகாவின் கைவசம் படங்கள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு, இவரை தங்களுடன் ஜோடி சேர்க்கதீவிரமாக முயன்று வருகின்றனர் ஓல்டு ஹீரோக்கள். ஆனால், அவர்களுக்கு பெரிய கும்பிடு போட்டு திருப்பிஅனுப்பி வைத்து வருகிறார் ஸ்னேகா.

இவ்வாறு ஸ்னேகாவிடம் சமீபத்தில் கும்பிடு வாங்கியவர் அர்ஜூன். சில்மிஷங்களுக்குப் பெயர் போன இவர்தனது அடுத்த படத்தில் ஸ்னேகா நடிப்பதாக ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்க, அது குறித்து நடிகர் சங்கத்தில் புகார்கொடுத்திருக்கிறார் ஸ்னேகா.

நடிக்கவே ஒப்புக் கொள்வதற்கு முன் தனது பெயரையும் படத்தின் பூஜை அழைப்பிதழில் போட்டுவிட்டார்கள்என்கிறார் ஸ்னேகா. அதே போல ஸ்னேகாவால் ஒதுக்கப்பட்ட மற்ற இரு ஓல்டுகள் விஜய்காந்த் மற்றும்பார்த்திபன்.

சான்ஸே இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்தாலும் சரி, பழைய பார்ட்டிகளுடன் மட்டும் ஜோடி சேரவேபோவதில்லை என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறாராம் ஸ்னேகா.

சூட்டிங் ஏதும் இல்லாததால் சில சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார். மழலையர் இல்லங்கள், மருத்துவமனைகள்,அநதரவாய் விடப்பட்டவர்களைக் காக்கும் அமைப்புகளுக்குச் சென்று அந்த அமைப்புகளுக்கு பப்ளிசிட்டிகிடைக்கவும், அதன் மூலம் அவர்களுக்கு உதவிகள் கிடைக்கவும் செய்து வருகிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil