»   »  ஆந்திரக் கரைக்கு இடம் பெயரும் சினேகா!

ஆந்திரக் கரைக்கு இடம் பெயரும் சினேகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினேகா கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப் படங்களைக் குறைத்துக் கொண்டு வருகிறாராம். மாறாக, தெலுங்குப் படங்களுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

தமிழ் ரசிகர்களுக்கு என்ன போதாத காலமோ தெரியவில்லை. இங்கிருந்து ஒவ்வொரு குஜிலிகளாக தெலுங்குப் பக்கம் ஒதுங்கஆரம்பித்து விட்டார்கள். முதலில் த்ரிஷா இங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அவருக்குப் பின்னால் இப்போது இன்னொருவர்தெலுங்குக்கு இடம் பெயரப் போகிறார்.

அந்த இன்னொருவர் நம்ம "புன்னகை இளவரசி என்று கூறப்பட்ட சினேகா தான். தந்தை மொழியான தெலுங்கை விட தாய்மொழியான தமிழுக்கே இவர் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார். இருந்தாலும் ஊறுகாய் போல அவ்வப்போதுதெலுங்கிலும் நடித்து வந்தார்.

அதிக கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று ஆரம்பத்தில் கூறி வந்த சினேகா, மும்பை குஜிலிகளின் படையெடுப்பு மற்றும் உடைஅவிழ்ப்பு காரணமாக கொஞ்சம் போல இறங்கி வந்து அவ்வப்போது கவர்ச்சியும் காட்டப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

அத்தோடு விட்டாரா என்றால் இல்லை. குத்தாட்ட நடிகைகளுக்குப் போட்டியாக குத்துப் பாடல்களிலும் குதித்தார்.

இப்போது தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிறையப் படங்களில் நடித்து வருகிறார். இதனால் தமிழ்ப்படங்களை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டாராம்.

தெலுங்கில் சினேகா நடித்து வெளியான "சங்கராந்தி, "ராதாகோபாலம் ஆகிய இரு படங்களும் சூப்பர் ஹிட்டாம். இதனால்சினேகாவுக்கு அங்கு டிமாண்ட் கூடி வருகிறதாம். கவர்ச்சி காட்டுவதில் முன்பு போல கெடுபிடி காட்டுவதில்லை என்பதால்சினேகாவை புக் செய்ய கையில் பணப் பெட்டிகளுடன் மணவாடுகள் சினேகா வீட்டு முன் காத்துக் கிடக்கிறார்களாம்.

"டப்பும் ஜாஸ்தி கிடைக்கிறது என்பதால் இனிமேல் தெலுங்குப் படங்களில் அதிகம் கவனம் செலுத்த சினேகாவும் முடிவு செய்துவிட்டார். இங்கிருந்து அடிக்கடி ஹைதராபாத்துக்கு பறந்து கொண்டிருந்தால் சரி வராது என்று அவர் தீர்மானித்துள்ளார்.

இதற்கு முதல் கட்டமாக, ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்கிப் போட சினேகா முடிவு செய்துள்ளாராம். விரைவில் அங்கேஜாகையை மாற்றப் போகிறாராம் சினேகா.

தமிழ் ரசிகர்களை கைவிட்டது மாதிரி நம்ம ஸ்ரீகாந்தையும் கைவிட்டுராதீங்க அம்மணி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil