சினேகனின் மகள் காதல், கவிதையின் போட்டோஸ்.. பாவாடை தாவணியில் க்யூட் சிரிப்பு!
சென்னை: பாடலாசிரியர் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிகளுக்கு ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தை பிறந்தது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு 'காதல்', 'கவிதை' என அழகான தமிழ் பெயர் வைத்து இருந்தார். தற்போது கன்னியா தனது குழந்தையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
பாடலாசிரியரான சினேகன் 'பாண்டவர் பூமி' படத்திற்காக அவர் எழுதிய தோழா தோழா பாடல் அனைவருக்கும் பிடித்தமான பாடலாகும். இவர் சுமார் 70 திரைப்படங்களுக்கு மேல் பாடல் எழுதி இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக இருக்கும் சினேகன், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பலரை, ஆறுதல் படுத்த அனைவரையும் கட்டிப்பிடித்ததால், இணையத்தில் பலரும் இவரை கட்டிப்பிடி சினேகன் என கிண்டல் செய்து வந்தனர். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய சினேகன், கட்டிப்பிடிப்பது என்பது அன்பின் வெளிப்பாடு என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.

திருமணம்: பாடலாசிரியர் சினேகனுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான சீரியல் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார். கன்னிகாவும் சினேகனும் 7 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். இவர்கள் பொது இடத்தில் சந்தித்து கொள்ளாததால், இவர்களின் காதல் விஷயம் யாருக்குமே தெரியாமல் ரகசியமாக இருந்தது. பின், இருவரும் திருமண பத்திரிக்கை கொடுத்து காதலை அறிவித்தனர். இவர்களுக்கு கமல்ஹாசன் தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
அழகான போட்டோஸ்: மனம் கவர்ந்த காதல் ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இரட்டை பெண் குழந்தைகளுக்கு காதல், கவிதை என கமல்ஹாசன் அழகான தமிழ் பெயர் வைத்துள்ளார். சினேகன், கன்னிகா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து 10 மாதமாகி உள்ள நிலையில், தனது இரட்டை பெண் குழந்தைகளை கன்னிகா தனது மடியில் உங்கார வைத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார். தீபாவளி ஸ்பெஷல் போட்டோஷூட்டில் இரட்டு குட்டீஸ்கும் ஒரே நிறத்தில் பாவாடை அணிவித்து கையில் மத்தப்பூவை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளனர். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், சிலர் கண்ணு பட போகுது சுத்திப்போடுங்க என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











