»   »  பாபா ராம்தேவை விட நான் குறைச்சலா டிரஸ் போடலை: மாஜி நடிகை சோபியா ஹயாத்

பாபா ராம்தேவை விட நான் குறைச்சலா டிரஸ் போடலை: மாஜி நடிகை சோபியா ஹயாத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: யோகா குரு பாபா ராம்தேவை விட தான் அதிக உடை அணிவதாக அண்மையில் கன்னியாஸ்திரியான முன்னாள் நடிகை சோபியா ஹயாத் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் நடிகை சோபியா ஹயாத். அவ்வப்போது அரைகுறை ஆடைகளில் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

Sofia Hayat says she wears more clothes than Baba Ramdev

ஒரு சுபயோக சுபதினத்தில் ச்ச்சீ ச்ச்சீ சினிமா புளிக்கிறது என்று கூறிவிட்டு கன்னியாஸ்திரியாகிவிட்டார். இனி எல்லோரும் என்னை அன்னை என்று அழைக்க வேண்டும் என்றார்.

கன்னியாஸ்திரியாகிவிட்டதாக கூறிய அவர் முன்னழகில் பெரும் பகுதி தெரியும்படி உடை அணிந்து யோகா செய்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்தவர்கள் சோபியா விளம்பரத்திற்காக கன்னியாஸ்திரியானதாக விமர்சித்தார்கள்.

இதை கேட்ட சோபியா வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, அது ஏன் பெண்களை மட்டும் விமர்சிக்கிறார்கள்? என் யோகா புகைப்படங்களில் நான் அணிந்திருப்பதை விட பாபா ராம்தேவ் குறைவான ஆடையே அணிகிறார். அப்படி இருக்கும்போது பெண்களை மட்டும் தண்டிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Former Big Boss contestant Sofia Hayat said that she wears more clothes than Yoga guru Baba Ramdev.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil