»   »  என் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க! - சோனா

என் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க! - சோனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் சுயசரிதையை படமாக்க இரண்டு தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். அந்தப் படம் வெளியானால் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்பதால் இப்படி போட்டி நிலவுகிறது என்கிறார் நடிகை சோனா.

கவர்ச்சியிலும் சரி, பரபரப்பிலும் சரி சோனாவின் ரூட்டே தனி. கவர்ச்சியில் எதையும் மிச்சம் வைக்கவில்லை அவர். அவரைச் சுற்றிய பரபரப்புகளுக்கோ பஞ்சமில்லை.

விருந்து, ஜாலி ட்ரிப் என பரபர வாழ்க்கையிலிருந்து இப்போது விலகி நிற்கும் சோனா, தன் உடல் எடையை 16 கிலோ வரை குறைத்து, அடுத்த ரவுண்டுக்கு தயாராக நிற்கிறார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியிலிருந்து...

சுய சரிதை

சுய சரிதை

சுயசரிதை எழுதிட்டீங்களா சோனா?

‘‘அதை எழுதி முடித்து ஒரு வருஷத்துக்கும் மேலாச்சே... அதை வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறேன். அதில் பல பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எல்லாமே உண்மைகள். எனவே அதை சினிமாவாக எடுக்க சில மலையாள தயாரிப்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். ஆனால், என் சுயசரிதை மலையாளத்தில் படமாக்கப்படுவதில், எனக்கு உடன்பாடு இல்லை.

ஏன்?

ஏன்?

நான், வசிப்பது தமிழ்நாட்டில். நான், முதன்முதலாக நடித்தது, ‘பூவெல்லாம் உன் வாசம்' என்ற தமிழ் படத்தில். நான் விழுந்து எழுந்தபோதெல்லாம் இந்த தமிழ் சினிமாதான் கை கொடுத்தது. என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழ் ரசிகர்கள்தான் என் சுயசரிதையைப் படமாகப் பார்க்க வேண்டும்.

அதனால், தமிழில் தயாரித்து வெளியிட யாராவது தயாரிப்பாளர் முன்வந்தால், உடனே சம்மதிப்பேன்.

விருந்துகள்

விருந்துகள்

முன்பெல்லாம் விருந்து, வெளிநாட்டுப் பயணங்கள் என பிஸியாக இருப்பீர்களே...

"உண்மைதான். பார்ட்டி பண்ண எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் ரெண்டு மூணு வருஷமா நான் வெளியே சுற்றுவதே இல்லை. விருந்துகளுக்கும் போவதில்லை. இனியும் அப்படித்தான்.."

இத்தனை ஆண்டுகளில் ஒரு நடிகையாக சாதித்தது என்ன?

இத்தனை ஆண்டுகளில் ஒரு நடிகையாக சாதித்தது என்ன?

"சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. 76 படங்களில் நடித்து விட்டேன். இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி அத்தனை ஹீரோக்களின் படங்களிலும் நடித்துவிட்டேன். தெலுங்கில் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன்.. இதுவே பெரிய சாதனைதான்.

உடல் அழகு...

உடல் அழகு...

உடம்பை கட்டுக் குலையாமல் வைத்துக் கொள்ள என்ன பண்றீங்க?

"என்னை நானே சந்தோஷமா வச்சிக்கறேன். இடையில் சிலர் என்னை நம்ப வைத்து ஏமாற்றினர். ஆனால் அவற்றிலிருந்து மீண்டுவிட்டேன். எனக்கு நான் உண்மையாக இருக்கிறேன். அது என்னை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்கிறது. கூடவே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள்..."

English summary
Actress Sona wishes to make a movie in Tamil on the basis of her Autobiography.
Please Wait while comments are loading...