»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

கருத்தம்மாவில் ஹீரோயினாக அறிமுகமாகி, சேதுவில் பைத்தியக்காரி வேடம், நந்தாவில் சூர்யாவின் தாயாராக வயதானவேடம் என்று நடித்து அத்தோடு சினிமா சான்ஸ்கள் ஒழிந்துபோய், டிவியில் நடித்து வரும் ராஜ்ஸ்ரீயின் தங்கையான சோனாசினிமாவில் நடிக்க நுழைந்து இரு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டாலும் சொல்லிக் கொள்ளும்படி எந்தப் படமும்கிடைக்கவில்லை.

சொன்னால் தான் காதலாவில் சின்ன ரோலில் தலை காட்டிய இவர், மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படத்தில் மூன்றுஹீரோயின்களில் ஒருவராக நடித்தார்.

ஆனால், படம் ஓடாததால் சோனாவும் அடிபட்டுப் போய்விட்டார்.

இதையடுத்து கன்னடத்தில் மகா லோ-பட்ஜெட் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

இவரது இலக்கு தமிழில் சான்ஸ்பிடிப்பதுதானாம்.

இதற்காக பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டார். இதன் பலனாக சமீபத்தில் வெளியான சிந்தாமல் சிதராமல்படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து தனது சான்ஸ் வேட்டையை தீவிரமாக்கியுள்ள சோனா, எனது அக்கா மாதிரி இழுத்துப் போர்த்தி எல்லாம்நடிக்க மாட்டேன்.

முடிந்தவரை காட்டத் தயார் என்று நேரடியாகவே தயாரிப்பாளர்களைச் சந்தித்து ஓபனாகவே பேசி சான்ஸ்கேட்டு வருகிறார்.

அத்தோடு தன்னை முடிந்தவரை தூக்கிக் காட்டி, தானே தயாரித்துள்ள ஆல்பத்தையும் அவர்களது கைகளில் திணித்துவிட்டுவருகிறாராம்.

எப்படிப்பட்ட கிளாமர் ரோல்னாலும் கூப்பிடுங்க என்று சொல்லி சான்ஸ் கேட்டு வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil