»   »  தாஸு.. உங்க மூளையை மியூசியத்துல தான் வைக்கணும் பாஸு... சோனாக்‌ஷியின் பாராட்டு!

தாஸு.. உங்க மூளையை மியூசியத்துல தான் வைக்கணும் பாஸு... சோனாக்‌ஷியின் பாராட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் மூளை மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டிய அளவிற்கு உயர்வானது என பாராட்டியுள்ளார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்‌ஷி சின்ஹா, தமிழில் ரஜினி ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்தியில் அகிரா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படமானது, நாயகியை மையப்படுத்திய கதை இது. எனவே உற்சாகத்துடன் நடித்துள்ளாராம் சோனாக்ஷி. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரோலில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை என்பது போனஸ் செய்தி.

அகிரா...

அகிரா...

தமிழில் அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தைத் தான் இந்தியில் அகிரா என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழில் நாயகனை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

சோனாக்‌ஷி...

சோனாக்‌ஷி...

ஆனால், இந்தியில் நாயகியை மையப்படுத்தி திரைக்கதையை சற்று மாற்றி இயக்கியுள்ளார் முருகதாஸ். இப்படத்தின் நாயகியாக சோனாக்‌ஷி சின்ஹா நடிக்க வில்லனாக அனுராக் கஷ்யப் நடித்துள்ளார். ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வித்தியாசமான படம்...

வித்தியாசமான படம்...

இதுவரை தான் நடித்ததிலேயே மிகவும் வித்தியாசமான படம் என அகிராவை சோனாக்‌ஷி பாராட்டியுள்ளார். ஏற்கனவே ஹாலிடே படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார் இவர்.

English summary
Bollywood actress Sonakshi Sinha, who is gearing up for the release of her next film 'Akira,' is all praise about director, AR Murugadoss. The actress, who has worked with Murugadoss earlier in the film 'Holiday' even went to the extent of saying that his brain should be kept in a museum.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil