»   »  சீக்கிரமே தாவூத்தின் தங்கையாக வேண்டும்.. அவசரப்படும் சோனாக்ஷி

சீக்கிரமே தாவூத்தின் தங்கையாக வேண்டும்.. அவசரப்படும் சோனாக்ஷி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தாவூத் இப்ராகிமின் தங்கை வேடத்தில் நடிக்க சோனாக்ஷி சின்ஹா ரொம்பவே ஆர்வமாக உள்ளாராம்.

தாவூத் இப்ராகிமின் தங்கை ஹசீனா. இவரது வாழ்க்கை வரலாறு படமாகப் போகிறது. ஹசீனா வேடத்தில் சோனாக்ஷி நடிக்கவுள்ளாராம்.

அபூர்வா லாக்கியா இந்தப் படத்தை இயக்கவுள்ளார். படத்தில் நடிக்க தான் ஆர்வமுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார் சோனாக்ஷி.

ஷூட்டவுட் அட் லோகந்த்வாலா புகழ்

ஷூட்டவுட் அட் லோகந்த்வாலா புகழ்

ஷூட்டவுட் அட் லோகந்த்வாலா புகழ் இயக்குநர்தான் அபூர்வா. இவர்தான் தற்போது ஹசீனாவின் வாழ்க்கையைக் கையில் எடுத்துள்ளார்.

ஹசீனாவாக சோனாக்ஷி

ஹசீனாவாக சோனாக்ஷி

ஹசீனா கேரக்டரில் பலரையும் பரிசீலித்த பின்னர் சோனாக்ஷியை இறுதி செய்துள்ளனர். இது சோனாக்ஷிக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாம்.

பிரில்லியன்ட் ஸ்கிரிப்ட்

பிரில்லியன்ட் ஸ்கிரிப்ட்

இதுகுறித்து சோனாக்ஷி கூறுகையில், இது பிரில்லியன்ட்டான ஸிகிரிப்ட். இதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

காத்திருக்க முடியாது பாஸ்

காத்திருக்க முடியாது பாஸ்

இதற்கு மேலும் இந்தப் படத்திற்காக காத்திருக்க முடியாது. அவ்வளவு ஆர்வமாக உள்ளேன் என்று டிவிடடரில் கூறியுள்ளார் சோனாக்ஷி.

தாவூதுக்கு 2 தங்கைகள்

தாவூதுக்கு 2 தங்கைகள்

தாவூத் இப்ராகிமுக்கு 2 தங்கைகள். மூத்தவர் ஹசீுனா பார்க்கர். 2வது சகோதரி சயீதா பார்க்கர்.

நிழலுலக ராணி

நிழலுலக ராணி

தாவூத் இப்ராகிம் போலவே நிழல் உலக ராணியாக வலம் வந்தவர் ஹசீனா. தனது மகன் அலிஷா மற்றும் 21 வயது மகளுடன் மும்பையின் நக்பதா பகுதியில் வசித்து வந்தார்.

55 வயதில் மரணம்

55 வயதில் மரணம்

கடந்த ஆண்டு தனது 55வது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் ஹசீனா. இவரது வாழ்க்கையைத் தற்போது படமாக்கவுள்ளனர்.

7வது பிள்ளை

7வது பிள்ளை

தாவூத் தந்தை முகம்மது இப்ராகிம், மும்பை குற்றப் பிரிவு போலீஸில் காவலராக இருந்தவர். இவருக்கு மொத்தம் 12 பிள்ளைகள். அதில் 7வது பிள்ளைதான் ஹசீனா.

சோனாக்ஷியைத் துரத்தும் தாவூத்

சோனாக்ஷியைத் துரத்தும் தாவூத்

தாவூத் இப்ராகிமுக்கும், சோனாக்ஷிக்கும் பூர்வ ஜென்ம் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று தெரியவில்லை. இதற்கு முன்பு ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மும்பை டோபாரா என்ற படத்தில் தாவூத்தின் காதலி வேடத்தில் நடித்திருந்தார் சோனாக்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது தாவூத்தின் தங்கையாக நடிக்கப் போகிறார்.

English summary
Sonakshi Sinha is all excited to play the role of underworld don Dawood Ibrahim's sister Haseena in an upcoming biopic. The film is helmed by Apoorva Lakhia of "Shootout at Lokhandwala" fame.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil