»   »  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சோனாக்ஷி சின்ஹா: காரணத்தை கேட்காதீ்ங்க ப்ளீஸ்!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சோனாக்ஷி சின்ஹா: காரணத்தை கேட்காதீ்ங்க ப்ளீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துவிட்டது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கின்னஸ் சாதனை படைக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் நகத்திற்கு பாலிஷ் போடுவது தான் அந்த நிகழ்ச்சி.

Sonakshi Sinha is now on Guinness Book of Records for weird reason

நகத்திற்கு பாலிஷ் போடும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் கலந்து கொண்டு தனது நகத்திற்கு பாலிஷ் போட்டார். ஒரு இடத்தில் ஏராளமான பெண்கள் ஒரே சமயத்தில் நகத்திற்கு பாலிஷ் போட்டதற்கான கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சோனாக்ஷி கூறுகையில்,

கின்னஸ் சாதனை புத்தகத்தில் என் பெயர் இடம்பெற வேண்டும் என எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே ஆசை. அந்த ஆசை இன்று நிறைவேறியுள்ளது. பெண்கள் மேம்பாடு குறித்து பல பெண்கள் தற்போது குரல் கொடுக்கிறார்கள்.

நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தால் பெண்கள் முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

English summary
Bollywood actress Sonakshi Sinha is now a Guinness World Record holder for painting her nails.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil