»   »  என்னம்மா, இப்படி ட்வீட் பண்ணிட்டீங்களேம்மா: சோனாக்ஷியை கிண்டல் செய்த ரசிகர்கள்

என்னம்மா, இப்படி ட்வீட் பண்ணிட்டீங்களேம்மா: சோனாக்ஷியை கிண்டல் செய்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் இறைச்சி விற்பனைக்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி கருத்து தெரிவித்த நடிகை சோனாக்ஷி சின்ஹாவை ட்விட்டரில் மக்கள் கிண்டல் செய்துள்ளனர்.

ஜெயின் சமூகத்தினரின் பண்டிகையையொட்டி மும்பையில் 4 நாட்கள் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. விலங்குகளை வதைக்கக் கூடாது என்று கூறி வந்த சோனாக்ஷி தற்போது இறைச்சி விற்பனைக்கு தடை விதித்ததை எதிர்த்து ட்வீட் செய்துள்ளார். இது சுதந்திர நாடு! பான்-இஸ்தானுக்கு வருக...அதாவது இந்தியா... முட்டாள்தனமான ஆட்டோகரெக்ட் என்று ட்வீட் செய்துள்ளார்.

அவரது ட்வீட்டை பார்த்த மக்கள் அவரை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளனர்.

முட்டாள்தனம்

சோனாக்ஷி சின்ஹா, இது ஒரு சுதந்திர நாடு அதனால் தான் படத்தில் காண்பிக்கும் முட்டாள்தனத்தை கட்டுப்படுத்துவது இல்லை. சிந்தா தா சிதா சிதா என சௌகன்னா சோர் ட்வீட் செய்துள்ளார்.

ஜடேஜா

இரட்டை வேடம். சோனாக்ஷி சின்ஹா என கிரிக்கெட் வீரர் சர் ஜடேஜா தெரிவித்துள்ளார். அதாவது விலங்குகளை வதைக்கக் கூடாது என்று கூறிவிட்டு தற்போது இறைச்சி விற்பனை மீதான தடையை எதிர்த்து அவர் ட்வீட் செய்ததை தான் ஜடேஜா அவ்வாறு கூறியுள்ளார்.

தடை

உங்கள் படங்களையும் தடை செய்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

அப்பா

சோனாக்ஷி சின்ஹா உங்கள் தந்தையும் அதே கட்சியில் தான் உள்ளார். அவரை கட்சியை விட்டு விலகி சாரா சோர் கட்சியில் சேருமாறு கூறுங்கள் என தவால் பட்டேல் கூறியுள்ளார்.

English summary
Bollywood actress Sonakshi Sinha gets trolled on twitter after she tweeted against meat ban in Mumbai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil