»   »  இந்த வருஷம் எப்படியாச்சும் காதலனைக் கண்டுபிடிச்சிரனும்... இது ரஜினி நாயகியின் "நியூ இயர்" தீர்மானம்!

இந்த வருஷம் எப்படியாச்சும் காதலனைக் கண்டுபிடிச்சிரனும்... இது ரஜினி நாயகியின் "நியூ இயர்" தீர்மானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த ஆண்டில் தன் காதலனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் புத்தாண்டு தீர்மானமாம்.

லிங்கா படத்தில் ரஜினி ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. தற்போது இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், காலெண்டரை மாற்றும் போதே இந்தப் புத்தாண்டில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் எடுப்பவர்கள் உண்டு. அந்தவகையில், சோனாக்‌ஷியின் புத்தாண்டு தீர்மானம் வித்தியாசமாக அமைந்துள்ளது.

அப்படி என்ன தீர்மானம் என்கிறீர்களா? இதோ அவரே கூறுகிறார்.

வித்தியாசமான வேடங்கள்...

வித்தியாசமான வேடங்கள்...

கடந்த ஆண்டு தொடக்கத்தில் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும், மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

புத்தாண்டு தீர்மானம்...

புத்தாண்டு தீர்மானம்...

அதன்படி நடந்தது. புத்தாண்டை பொறுத்தவரை உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் தீர்மானம் என்று எதையும் வரையறுக்கவில்லை. என்ன நடக்கிறதோ அதை அப்படியே ஏற்க உள்ளேன்.

காதலன்...

காதலன்...

அநேகமாக இந்த ஆண்டு எனது காதலனை தேடி கண்டுபிடிப்பேன். வேண்டுமானால் இதையே புத்தாண்டு தீர்மானமாக எடுத்துக்கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

பச்சைக்கொடி...

பச்சைக்கொடி...

தற்போது 28 வயதாகும் சோனாக்‌ஷிக்கு வீட்டில் திருமணத்திற்கு தீவிரமாக வரன் பார்த்து வருகிறார்களாம். அவர்களுக்கு சம்மதம் கூறுவது போலவே, இப்படி பச்சைக்கொடி காட்டியுள்ளாராம் அவர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    "I was good at sticking to resolutions last year which was to try out different stuff and experimenting with roles. I honestly don't have a resolution this year because I am just content with whatever is happening. Probably find love, that will be New Year resolution" said bollywood actress Sonakshi Singa in her recent interview.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more