»   »  பாலிவுட்டின் 'செல்பி ராணி' என்பதை மீண்டும் நிரூபித்த லிங்கா நாயகி

பாலிவுட்டின் 'செல்பி ராணி' என்பதை மீண்டும் நிரூபித்த லிங்கா நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லேடி ரஜினி என்று அழைக்கப்படும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது சமீபத்திய ஸ்கூபா டைவிங் சாகசங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட அது ரசிகர்கள் பலரிடமும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தி சூப்பர்ஸ்டார் சல்மான் கானின் தபாங் படத்தில் அறிமுகமான சோனாக்ஷி சின்ஹா தொடர்ந்து ரவுடி ரத்தோர் மற்றும் தமிழில் லிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

Sonakshi Sinha share her underwater selfie during scuba diving

இதில் தபாங், ரவுடி ரத்தோர் சூப்பர் ஹிட்டடிக்க லிங்கா சோனாக்ஷியின் எதிர்கால தமிழ் சினிமாவிற்கு தடையாக அமைந்து விட்டது.

இவர் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் அகிரா மற்றும் போர்ஸ் 2 ஆகிய படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 28 வயதாகும் சோனாக்ஷிக்கு பாலிவுட்டின் 'செல்பி ராணி' என்ற செல்லப்பெயரும் உண்டு.

தற்போது அதனை நிரூபிக்கும் வகையில் தனது சமீபத்திய ஸ்கூபா டைவிங் சாகசங்களை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

சோனாக்ஷியின் இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இது குறித்து அவர் கூறும்போது "வெகு தொலைவில் நட்சத்திர மீன்களுடன் செல்பி எடுத்துக் கொண்டேன்.

என்னுடைய இந்த சிறிய சாகச பயணத்தை நான் மிகவும் விரும்புகிறேன். கடல் எனக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது". என்று கடலுக்கு அடியில் மிதந்து கொண்டே செல்பி எடுத்திருக்கிறார்.

சோனாக்ஷியின் இந்த செல்பிக்களை பார்ப்பவர்கள் அவர் மீண்டும் ஒருமுறை தான் பாலிவுட்டின் செல்பி ராணி என்பதை நிரூபித்து விட்டார் என்று கூறி வருகின்றனர்.

சோனாக்ஷி சின்ஹாவின் நடிப்பில் அடுத்ததாக அகிரா மற்றும் போர்ஸ் ஆகிய படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sonakshi Sinha has not only given out some serious vacation goals, but she has also grabbed the title of B-town’s selfie queen. She recently went scuba diving and shares her underwater selfie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil