»   »  பெரிய கயிறு.. அந்தப் பக்கம் ஒரு இழு.. இந்தப் பக்கம் ஒரு இழு.. வைரலாகும் சோனாக்ஷி எக்சர்ஸைஸ்!

பெரிய கயிறு.. அந்தப் பக்கம் ஒரு இழு.. இந்தப் பக்கம் ஒரு இழு.. வைரலாகும் சோனாக்ஷி எக்சர்ஸைஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ரோப் பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகளுக்கு மத்தியில் பூசினாற் போன்ற உடல்வாகு உள்ளவர் சோனாக்ஷி சின்ஹா. அதற்காக தன்னை யார் கிண்டல் செய்தாலும் கண்டுகொள்ளாத தைரியசாலி.

தற்போது அவர் தனது உடல் எடையை கட்டுக்குள் வைத்துள்ளார். ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்கிறார். இந்நிலையில் அவர் ரோப் பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இரண்டு கைகளாலும் இரண்டு பெரிய கயிறுகளை பிடித்து அவர் ஒர்க்அவுட் செய்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. நல்லா சாப்பிட வேண்டும், ஒர்க் அவுட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர் சோனாக்ஷி.

சோனாக்ஷி தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் சேர்ந்து இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

English summary
Sonakshi Sinha shared her fitness mantra recently. Sonakshi posted her workout video on her Instagram handle where she is seen working out vigorously.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil