»   »  இந்தப் "பக்கி" ஒன்னு கேட்டுச்சு.. பதில் சொன்னேன்... இப்ப சத்தமே இல்லை.. சோனாக்ஷி போட்ட போடு!

இந்தப் "பக்கி" ஒன்னு கேட்டுச்சு.. பதில் சொன்னேன்... இப்ப சத்தமே இல்லை.. சோனாக்ஷி போட்ட போடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: டிவிட்டரில் தன்னைத் தர்மசங்கடப்படுத்தும் வகையில் கேள்வி கேட்ட வக்கிரப் புத்தி கொண்ட நபருக்கு செமையாக நோஸ் கட் கொடுத்து விரட்டியுள்ளார் சோனாக்ஷி சின்ஹா.

தன்னைக் கேலி செய்பவர்களைப் பார்த்து சோனாக்ஷி பயப்படுவதே இல்லை. மாறாக கேலி செய்பவர்களை அவர்களது ஸ்டைலிலேயே போய் விரட்டி விடுவது அவரது ஸ்டைலாக மாறியுள்ளது.

இந்த நிலையில் டிவிட்டரில் தன்னை டார்ச்சர் செய்த நபரையும் இப்படி விரட்டியடித்துள்ளார் சோனாக்ஷி.

பர்தீக் கோயல்

பர்தீக் கோயல்

பர்தீக் கோயல் என்பவர்தான் இப்படி சோனாக்ஷியிடம் மூக்குடைபட்டு போனவர். சோனாக்ஷி இப்படி செய்வார் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

கரமம் புடிச்ச கேள்வி

கரமம் புடிச்ச கேள்வி

டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார் சோனாக்ஷி. அப்போது கோயல் கேட்ட கேள்வி இது - எப்போது உங்க உடம்பிலிருந்து ஆடை விலகும், எப்ப பிகினி அணியப் போறீங்க என்று கேட்டிருந்தார் அவர்.

பதிலடி

பதிலடி

அதற்கு சற்றும் அசராமல் சோனாக்ஷி ஒரு பதிலை கொடுத்தார். கோயல் அதை உங்களது அம்மா, சகோதரிகளிடம் போய் முதலில் கேளுங்கள். பிறகு என்னிடம் திரும்பி வாருங்கள் என்று கூறியிருந்தார்.

வெட்கம் கெட்டவன்

வெட்கம் கெட்டவன்

அத்தோடு நில்லாமல், இவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். நானும் பதில் சொல்லியிருந்தேன். அதன் பிறகு அவரிடமிருந்து பதில் இல்லையே என்று கூறி #shametheshameless என்றும் ஹேஷ்டேக் செய்திருந்தார்.

இதுதான் அந்த மூஞ்சி

இதுதான் அந்த மூஞ்சி

அத்தோடு நில்லாமல் தன்னை டென்ஷனாக்கிய அந்த நபரின் புரபைல் பக்கத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்திருந்தார் சோனாக்ஷி.

சண்டைக்கு வந்த பெண்

சண்டைக்கு வந்த பெண்

ஆனால் கோயலுக்கு ஆதரவாக ஒரு பெண் கருத்தைப் பதவிட்டிருந்தார். ஆனால் அவரையும் விடவில்லை சோனாக்ஷி. ஓஹோ நீங்க அவரோட இசைவுக்கேற்ற பெண் போல. எப்படிப்பட்ட பெண் நீங்கள். இப்படிப்பட்டவரைப் போய் ஆதரிக்கிறீர்களே என்று அவரையும் வாரியிருந்தார் சோனாக்ஷி.

மன்னிச்சு விட்ருங்க சாமி

இந்த களேபரத்தால் பயந்து போன கோயல் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து தனது டிவீட்டை எடுத்து விட்டார் சோனாக்ஷி.

"ஷாட் கன்" மகளாச்சே.. சும்மாவா!

English summary
Veteran actor Shatrugan Sinha’s daughter and actress Sonakshi Sinha has often shut trolls in style, but her latest response is simply awesome.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil