»   »  முடிந்தது ரெஸ்ட்... மீண்டும் ஆக்ஷனில் சோனாக்ஷி!

முடிந்தது ரெஸ்ட்... மீண்டும் ஆக்ஷனில் சோனாக்ஷி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: விடுமுறை கொண்டாட்டங்கள் முடிந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

பிரபல ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா, ரஜினி ஜோடியாக லிங்கா படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ‘தேவர்' படத்தில் நடித்த சோனாக்‌ஷி, ஓய்வு தேவை என விடுமுறை எடுத்துக் கொண்டு மாலத்தீவிற்கு பறந்தார்.

ஆசை தீர அங்கு விடுமுறையைக் கழித்த சோனாக்‌ஷி, தற்போது மீண்டும் மும்பை திரும்பி நடிக்க வந்து விட்டார். முதல் வேலையாக ஏ.ஆர்.முருகதாஸின் படத்தில் நடிக்கிறார்.

வாழ்த்துங்கள்...

வாழ்த்துங்கள்...

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சோனாக்‌ஷி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அதில் அவர், ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் இயக்கத்தில் முதல் நாள் ஷூட்டிங். கேமரா முன் நிற்க காத்திருக்க முடியவில்லை. உற்சாகமாக வந்திருக்கிறேன். எல்லாரும் என்னை வாழ்த்துங்கள்' என உற்சாகம் பொங்க பதிவு செய்துள்ளார்.

இந்தியில் மவுனகுரு...

இந்தியில் மவுனகுரு...

நாயகியை மையமாகக் கொண்ட கதைக்களம் இப்படம். இது தமிழில் வெற்றிப் பெற்ற மௌனகுரு படத்தின் இந்தி ரிமேக் ஆகும். தமிழில் நாயகனை சுற்றி அமைக்கப் பட்டிருந்த கதைக்களம் இந்தியில் நாயகியைச் சுற்றி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.

சத்ருகன் சின்ஹா...

சத்ருகன் சின்ஹா...

இப்படத்தில் சோனாக்‌ஷியின் தந்தையும், முன்னாள் பாலிவுட் நட்சத்திரமுமான நடிகர் சத்ருகன் சின்ஹாவும் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஹாலிடே...

ஹாலிடே...

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சோனாக்‌ஷி நடிப்பது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக அக்‌ஷய்குமார் ஜோடியாக முருகதாஸ் இயக்கத்தில் ஹாலிடே படத்தில் நடித்திருந்தார். இந்தி ரீமேக்கான 'கஜினி', 'துப்பாக்கி'யின் ரீமேக்கான 'ஹாலிடே' ஆகிய படங்களைத் தொடர்ந்து முருகதாஸ் இந்தியில் இயக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தகது.

அடுத்து ரஜினி?

அடுத்து ரஜினி?

இந்தப் படத்தை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த்தை இயக்க வருவார் முருகதாஸ் என்கிறார்கள்.!

English summary
Sonakshi Sinha, who recently flew down to Maldives for some ‘me’ time, is back in front of the cameras. Sonakshi, who was last seen in Boney Kapoor’s ‘Tevar’ was thrilled to get back to work again.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil