»   »  இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா?: பொழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கே!

இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகையா?: பொழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தன்னை பற்றி யாரும் கிசுகிசுக்கக் கூடாது, யார் வாய்ப்பையும் தட்டிப் பறிக்கக் கூடாது என்று நினைக்கிறார் பாலிவுட் நடிகை சோனம் கபூர்.

பாலிவுட் நடிகை சோனம் கபூருக்கு கடந்த ஆண்டு சிறப்பானதாக அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான நீரஜா சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை பார்த்தவர்களால் சோனமின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அந்த படத்திற்காக சோனம் கபூருக்கு பல விருதுகள் கிடைத்தது.

காதல்

காதல்

சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து பேச மறுக்கிறார் சோனம். இருப்பினும் ஆனந்துடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

கிசுகிசு

கிசுகிசு

மக்கள் என் படங்களை பற்றி தான் பேச வேண்டுமே தவிர என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அல்ல. நான் யாரை காதலிக்கிறேன் என்பது பெரிய விஷயம் அல்ல. என்னை பற்றி யாரும் கிசுகிசுப்பதை நான் விரும்பவில்லை என சோனம் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புகள்

பட வாய்ப்புகள்

அடுத்தவர் காலை வாரிவிட்டு நான் முன்னுக்கு வர விரும்பவில்லை. கவுரவமாக நடந்து கொள்ள விரும்புகிறேன். நான் எந்த ரேஸிலும் இல்லை. நான் இங்கு பணிபுரிகிறேன் அவ்வளவு தான். எனக்கு பிடித்த படங்களில் நடிக்கிறேன் என சோனம் கபூர் கூறியுள்ளார்.

சோனம்

சோனம்

நடிகைகள் ஒருவரின் வாய்ப்பை ஒருவர் தட்டிப் பறித்து வரும் நிலையில் சோனம் கபூரோ யார் வாய்ப்பையும் தட்டிப் பறிக்க மாட்டேன் என்கிறார். வாய்ப்புகளை பெற, விளம்பரம் தேட சில முன்னணி நடிகைகளே தங்களை பற்றி வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் சோனம் வித்தியாசமாக உள்ளார்.

English summary
Bollywood actress Sonam Kapoor said that she doesn't want to pull other people down to pull herself up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil