»   »  ஹீரோ இல்லாமல் 100 கோடி கிளப்பில் நுழைந்த சோனம் கபூர்.. வாயைப் பிளக்கும் பாலிவுட் !

ஹீரோ இல்லாமல் 100 கோடி கிளப்பில் நுழைந்த சோனம் கபூர்.. வாயைப் பிளக்கும் பாலிவுட் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சோனம் கபூர் நடிப்பில் வெளியான நீரஜா திரைப்படம், உலகளவில் இதுவரை 130 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.

சோனம் கபூர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான் படம் நீரஜா. தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய விமானத்தை, பணிப்பெண் மீட்க முயற்சி செய்வதுதான் இப்படத்தின் கதை.

Sonam Kapoor's Neerja Crossed 130 Crores

1986 ம் ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்ற பான் ஆம் 73 விமானம், வழியில் கராச்சியில் தரையிறங்கியபோது 4 தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த பணிப்பெண் நீரஜா பானட் (இந்தியா), மற்றவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தனது இன்னுயிரைத் துறந்தார்.

அவரின் சேவையைப் பாராட்டி இந்தியாவின் மிக உயரிய விருதான அசோகா சக்ரா விருது நீரஜா பானட்டிற்கு வழங்கப்பட்டது. தனது 23 வது பிறந்த நாளைக் கொண்டாடிய 2 தினங்களில் நீரஜா இறந்து போனது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை தழுவி வெளியான நீரஜா படத்தில், இளம் நடிகை சோனம் கபூர், நீரஜா பானட் வேடத்தில் நடித்திருந்தார்.

Sonam Kapoor's Neerja Crossed 130 Crores

வெளியாகி ஒரு மாதமாகியுள்ள நிலையில்,உலகளவில் சுமார் 130 கோடிகளை வசூலித்து இப்படம் சாதனை படைத்திருக்கிறது.

இதன் மூலம் பாலிவுட் ஹீரோக்களின் இடம் பெறாத நிலையில் 100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளதுஇப்படம்.

அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான ஏர்லிப்ட் படத்திற்கு இணையாக நீரஜா படத்தையும் விமர்சகர்கள் பாராட்டியிருந்தனர். பாராட்டு மட்டுமின்றி வசூலிலும் நீரஜா புது சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சோனம் கபூரின் இந்த சாதனை பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Sonam Kapoor's Neerja Movie Crossed 130 Crores at Worldwide Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil