»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டச் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இஷிதா.

விஜயை வைத்து சந்திரலேகா படத்தை இயக்கிய நம்பிராஜ் தற்போது எடுத்து வரும் படம் தான் டச்.

இப் படத்தின் ஹூரோ ஜெய். ஹீரோயினாக மும்பை பிகரான இஷிதா ஜோஷியை அறிமுகப்படுத்துகிறார்கள். ஏற்கனவேமும்பையில் மாடலிங்கில் தலைகாட்டியவராம்.

கூடவே சினிமா ஆசையும் வந்ததால் தெலுங்கு, தமிழ், இந்தி என அலைந்து, திரிந்து இந்த வாய்ப்பைப்பெற்றிருக்கிறார்.

சான்ஸ் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நேரடியாகவே உணர்ந்தவர் என்பதால்தயாரிப்பாளர், இயக்குனருக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறாராம்.

கூடவே ஏடா கூடமாய் நடிக்கவும் தயாராக இருப்பதால், ஏகப்பட்ட டச்சிங்கான சீன்களும் இடம் பெற்றுள்ளன.

புதுமுகம் தான் என்றாலும் ஜெய்யும் சும்மா இல்லையாம். இஷிதாவோடு சேர்ந்து படத்தில் கும்மாளமே போட்டுவருகிறார்.

எந்த டிரஸ் கொடுத்தாலும் அடம் பிடிக்காமல் போட்டுக் கொள்வதாக இயக்குனர் சர்டிபிகேட் கொடுக்கிறார்.

மிக நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து வரும் படம் என்பதால், பழைய காட்சிகளை எல்லாம் நீக்கிவிட்டு,இன்றைய டிரண்டுக்கு ஏற்ற மாதிரி புதுசாக அதிக கவர்ச்சியுடன் காட்சிகளை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இந்தப் படம் வெளி வந்தால் நிச்சயம் தமிழில் ஒரு ரவுண்டு வருவேன் என்று சொல்லும் இஷிதா, தமிழ் கற்பதில்தீவிரமாக இறங்கியிருக்கிறார். ஆள் வைத்து தமிழ் கற்று வரும் இஷிதா இப்போது, நாண் நல்லா தமில் பேசும்என்கிறார்.

காலியாக இருக்கும் சிம்ரன் இடத்தை ஆக்கிரமிக்க ஆசையாம். இது பேராசையாச்சே இஷிதா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil