»   »  ஒரு கல்லூரியின் கதையில்... சோனியா

ஒரு கல்லூரியின் கதையில்... சோனியா

Subscribe to Oneindia Tamil

ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தில் புதுமுகம் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் சோனியா அகர்வால்.

அமராவதி படத்தின் மூலம் அஜித்தை அறிமுகப்படுத்திய பட நிறுவனம் சோழா கிரியேஷன்ஸ். தலைவாசல், காலாட்படை பெயர் சொல்லும் படங்களைத் தயாரித்த இந்த நிறுவனம் தற்போது சங்கவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ஒரு கல்லூரியின் கதை என்ற படத்தைத் தயாரிக்கிறது.

கதாநாயகனாக ஆர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

7ஜி ரெயின்போ காலனி படத்தின் வெற்றிக்குப் பின் திறமையான நடிகை என்று பெயரெடுத்திருக்கும் சோனியா அகர்வால், படங்களை ஒத்துக் கொள்வதில் ரொம்பவும் செலக்டிவ்வாக இருக்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், உங்களுக்கு அண்ணி ஆகப் போறவங்க.. அவங்களைப் போய் கட்டிப்பிடிச்சு நடிச்சுக்கிட்டு என்று மனைவி ஐஸ்வர்யா கொடுத்த அட்வைஸ் காரணமாக ஹீரோயினை மாற்றுமாறு அண்ணனிடம் சொல்லிவிட்டாராம் தனுஷ்.

இந் நிலையில்தான் ஒரு கல்லூரியின் கதையைக் கேட்டு, ரொம்பவும் பிடித்துப் போய் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சோனியா.

இதில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், செந்தில், ஊர்வசி, நெடுமுடிவேணு, தலைவாசல் விஜய், மனோபாலா, டெல்லி கணேஷ், கோலங்கள் டிவி தொடர் புகழ் ஸ்ரீவித்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நா.முத்துக்குமார் பாடல்களுக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குவது நந்தா பெரியசாமி.

இம் மாதம் 18ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி சென்னை மற்றும் இலங்கையில் படமாக்க இருக்கிறார்கள்.

கடைசியா ஒரு கிசுகிசு, கொஞ்சம் காதைக் கொடுங்கள். செல்வராகவனும், சோனியா அகர்வாலும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil