»   »  ''பேயாக'' திரும்பி வரும் சோனியா அகர்வால்!

''பேயாக'' திரும்பி வரும் சோனியா அகர்வால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரொமான்ஸ் நாயகியாக வலம்வந்த சோனியா அகர்வால் தற்போது ஆக்ஷனுக்கு பாதை மாறியிருக்கிறார்.

'காதல் கொண்டேன்' படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் தொடர்ந்து 'கோவில்', '7 ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' போன்ற படங்களில் நடித்து தமிழக ரசிகர்களைக் கவர்ந்தார்.

Sonia Agarwal next movie Details

2006 ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன்-சோனியா அகர்வால் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2010ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

விவகாரத்திற்குப் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சோனியா அகர்வால் நடித்து வருகிறார். தற்போது சோனியா அகர்வாலை மையமாக வைத்து 'சாயா' என்னும் படம் உருவாகி வருகிறது.

இதில் சோனியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சோனியாவுக்கு ஜோடியாக சந்தோஷ் என்னும் புதுமுக நடிகரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

அறிமுக இயக்குநர் பழனிவேல் இயக்கும் இப்படம் பேய்களை மையமாகக்கொண்டு உருவாகி வருகிறது.

English summary
Sonia Agarwal's Next Movie has been Titled by Saya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil