»   »  மீண்டும் சோனியா அகர்வால்?

மீண்டும் சோனியா அகர்வால்?

Subscribe to Oneindia Tamil


கல்யாணம் செய்து கொண்டு செல்வராகவனுடன் செட்டிலாகி விட்ட சோனியா அகர்வாலை மீண்டும் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் சோனியாவுக்கு மறுபடியும் அரிதாரம் பூச விருப்பம் இல்லையாம்.

Click here for more images

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்து முழு நிலவாக ஜொலித்த ஒரு சில நல்ல நடிகைகளில் சோனியாவும் ஒருவர். செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம் மூலம் நடிகையான சோனியா அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களிலும், வெளிப் படங்களிலும் நடித்து கலக்கினார்.

நல்ல நடிகையாக அறியப்பட்ட சோனியாவுக்கும், செல்வாவுக்கும் காதல் மலர்ந்தது. ரோஜா, செல்வமணி போல இவர்களது காதலும் பரபரப்பாக பேசப்பட்டது. எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏகத்திற்கு இருந்தது.

இந்த நிலையில் திடுதிப்பென கல்யாணத்திற்கு நாள் குறித்து, சுப யோக சுப தினத்தில் கல்யாணமும் சிறப்பாக நடந்தேறியது.

கல்யாணத்திற்குப் பின்னர் வீட்டோடு செட்டிலானார் சோனியா. தமிழ்நாட்டு மருமகளாக வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த நிலையில் சோனியா நல்ல நடிகையாச்சே என்று கூறி பலரும் சோனியாவை மீண்டும் நடிக்க வைக்கலாமே என்று செல்வராகவன் மற்றும் கஸ்தூரிராஜாவிடம் அணத்த ஆரம்பித்துள்ளனராம்.

அதேபோல பல பட வாய்ப்புகளும் சோனியாவைத் தேடி வருகிறதாம். விருப்பம் இருந்தால் நடிக்கலாம் என்று செல்வராகவன் கூறியுள்ளார். மாமனார் கஸ்தூரியும் ஓ.கே. சொல்லியுள்ளாராம்.

ஆனால் சோனியாவுக்குத்தான் நடிக்க விருப்பமில்லையாம். இதுவரை நடித்ததே போதும், இனிமேல் இல்லத்தரசியாக இனிய இல்லறத்தை அனுபவிக்கவே ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளாராம் சோனியா.

இதனால் சோனியாவை மீண்டும் நடிக்க வைக்க முயற்சித்தவர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனராம்.

Read more about: soniaagarwal
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil