»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாதவன், புதுமுகங்கள் அமோகா, பூஜா நடிப்பில் உருவாகியுள்ள ஜேஜே படத்தின் ஆடியோ கேசட்டைகமல்ஹாசன் வெளியிட்டார்.

இயக்குனர் கே.பாலச்சந்தர் முதல் கேசட்டைப் பெற்றுக் கொண்டார்.

சரண் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களைப்புனைந்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்ஸ படங்களில் தற்போது தொப்புளை படு ஆபாசமாக காட்டுவது அதிகரித்துவிட்டது. அது ஒரு புனிதமான பகுதி என்பதை மறந்து விட்டோம். முதலில் பம்பரம் விட்டார்கள், கடலையேதொப்புளில் விட்டுள்ளார்கள் என்றார்.

குறும்பை வெளிக்காட்ட தொப்புளை முன்பு பயன்படுத்தினோம். ஆனால் இப்போது அது ஆபாசப் பொருளாகமாறி விட்டது வருத்தம் தருகிறது என்றார் கே.பாலச்சந்தர்.

இந்தப் படத்தின் ஹீரோயின் அமோகாவின் தொப்புளில் கடல் அலை மோதுவது போன்ற ஒரு காட்சி கிராபிக்ஸ்முறையில் செய்யப்பட்டுள்ளது. அது இந்த நிகழ்ச்சியில் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்த்துவிட்டுத் தான்கமலும் பாலசந்தரும் இவ்வாறு பேசினர்.

கலக்க வருகிறார் கார்த்திக் ராஜா

இசை ஞானி இளையராஜாவின் வாரிசாக அறிமுகப்படுத்தப்பட்டவர் அவரது முதல் புதல்வன் கார்த்திக் ராஜாதான்.ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது இளைய மகன் யுவன் ஷங்கர் ராஜா இப்போது முன்னணிக்கு வந்துவிட்டார்.

கார்த்திக் ராஜா காணாமல் போய் விட்டார். ஆனால், ரகசியமாய் படம் கார்த்திக் ராஜாவுக்கு பெரும்திருப்புமுனையை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் ராஜாவுக்குக் கிடைத்துள்ள படமாம் ரகசியமாய். இந்தப் படத்திற்குஅட்டகாசமான டியூன்களைப் போட்டுள்ளாராம் கார்த்திக் ராஜா. இளையராஜாவின் மெலடிகளை மிஞ்சும்அளவுக்கு மிக நன்றாக வந்துள்ளனவாம் பாடல்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil