»   »  ரம்யமான செளம்யா!!

ரம்யமான செளம்யா!!

Subscribe to Oneindia Tamil


தெலுங்கிலிருந்து ரம்யமான ஒரு புது முகம் தமிழுக்கு வருகிறார். அந்த அழகின் பெயர் செளம்யா.

Click here for more images

விசாகப்பட்டனத்தைச் சேர்ந்த இந்த விழியழகி, ஆங்கேரஸ், ஆரோஜே ஆகிய படங்களில் நடித்து தெலுங்குத் திரையுலகை கலக்கியவர். தற்போது கால் சென்டர் உள்ளிட்ட இரு தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவரைத் தேடி 2 தமிழ்ப் படங்கள் ஓடோடி வந்துள்ளன. அதில் முதல் படம் தோழா. சென்னை 600028 படத்தில் நடித்த புதுமுகங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதில் செளம்யாதான் நாயகி. இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறாராம்.

அடுத்து ரவி கிருஷ்ணாவுடன் நேற்று இன்று நாளை படத்தில் நடிக்கிறார் செளம்யா. இந்தப் படம் தெலுங்கில் நின்னா நேடு ரேப்பு என்ற பெயரில் உருவாகிறது.

ஒரே நேரத்தில் தமிழையும், தெலுங்கையும் எப்படித் தாங்குவீர்கள் என்று கேட்டபோது, தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவாகும். இப்போது தோழா மூலம் அந்தக் கனவு நனவாகியுள்ளது. இது தமிழில் எனக்கு நல்ல ஓப்பனிங்கைக் கொடுக்கும்.

நான் இப்ேபாது சென்னையில் முகாமிட்டுள்ளேன். ரவி கிருஷ்ணாவுடன் நடித்து வரும் படத்தில் நான் நடிக்கும் காட்சிகளை ஏற்கனவே படமாக்கி விட்டார்கள் என்றாம்.

செளம்யாவுடன் பேசுவது செளக்யமான உணர்வைத் தருகிறது.

Read more about: debut, soumya
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil