»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

பல மொழித் திரைப்படங்களில் நடித்து வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருப்பவர் சவுந்தர்யா.

பொன்னுமணி தமிழ்த்திரைப்படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதற்குப்பிறகு படையப்பா, காதலா காதலா என்று பல தமிழ் படங்களில் தூள் கிளப்பினார்.

ரஜினி, கமல், சத்யராஜ், கார்த்திக் என்று பெரிய ஸ்டார்களுடன் நடித்தார் இவர்.

தெலுங்கு சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் சவுந்தர்யா தற்போது படு பிஸியாக இருக்கிறார்.காலையில் மைசூரில் ஷூட்டிங், பிற்பகல் ஹைதராபாத்தில் ஷூட்டிங் என நாள் பூராவும் உழைக்கிறார்.

சவுந்தர்யா என்றதும் அவரது தளதளக்கும் அழகு மேனியும், மனதை கொள்ளையடிக்கும் யதார்த்தமானமோனலிசா சிரிப்பும்தான் நினைவுக்கு வரும்.

சவுந்தர்யாவின் மினி பேட்டி:

கே: சிம்ரனால் உங்கள் புகழ், படங்கள் குறைந்து விட்டது என்று கூறுகிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மைசவுந்தர்யா?

ப: போட்டியில்லாமல் ஒரு த்ரில்லிங்க்கும் இல்லை. போட்டி அதிகமாக இருக்கும்போதுதான் நமது திறமையும்வெளிப்படும். நம்பர் ஒன், நம்பர் டூ இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது.

எனக்குக் கிடைக்கும் கேரக்டரை ரொம்ப அற்புதமா செய்யணும்னு அதற்கான எல்லா முயற்சிகளையும்செய்கிறேன்.

ரசிகர்களை கவரும் வகையில் ஆக்ட் பண்ணுகிறேன். தட்ஸ் ஆல்.

கே: நீங்க ரொம்ப கிளாமரா நடிக்கிறதா பேச்சு இருக்கிறதே?

ப: நோ.. நோ.. (அவசரமாக மறுக்கிறார்) நான் கதைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே கிளாமராக நடிக்கிறேன்.கதைக்குத் தேவைப்பட்டால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை.

கே: சினிமா உலகில் உள்ளவர்கள், சாவித்திரி, வாணிஸ்ரீ, ஜெயசுதா மாதிரி இப்போது சவுந்தர்யா என்றுகூறுகிறார்களே?

ப: பெரிய, பெரிய நடிகைகளுடன் எல்லாம் என்னை கம்பேர் செய்யாதீர்கள். சினிமா ஒரு கடல் மாதிரி. அதில்ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயம் கற்றுக் கொண்டு வருகிறேன்.

சாவித்திரி போல் பெரிய நடிகையாவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.

கே: உங்களின் கனவு ரோல் எது சவுந்தர்யா?

ப: நான் வில்லியாக நடிக்க விரும்புகிறேன். ரொம்ப சீக்கிரமா அந்த ஆசை நிறைவேறும் என்றும் நம்புகிறேன். நான்வில்லியாக நடித்த படம் ஒன்று விரைவில் வெளிவரவிருக்கிறது.

என்னங்க ஹீரோயின் எல்லாம் வில்லியாயிட்டா எப்படிங்க?

Read more about: acting, galmour, roll, soundarya, tamilnadu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil