»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

பக்திப் படங்களுக்குக் கதாநாயகியாக நடிப்பதை ரம்யா கிருஷ்ணனும், செளந்தர்யாவும் மொத்தக் குத்தகைக்குஎடுத்துள்ளார்கள் போலிருக்கிறது.

அம்மன் என்றால் ரம்யா கிருஷ்ணன்; அம்மனிடம் பெரும் பக்தி கொண்ட அப்பாவிப் பெண் என்றால் செளந்தர்யாஎன்பது எழுதப்படாத விதியாகி விட்டது.

மாறுதலுக்காக மீனா, விஜயசாந்தி ஆகியோர் நடித்த பக்திப் படங்கள் எதுவும் ஓடவில்லை.

கல்யாணம் செய்து கொண்ட செட்டில் ஆன செளந்தர்யா, கரண்டி பிடிப்பதில் அலுப்பு வந்ததாலோ என்னவோமீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

நீயா பட டைப்பில் தயாராகும் மதுமதி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பாம்பு ஆராய்ச்சி செய்யும் பெண்ணாக செளந்தர்யா. அவரது காதலன் அப்பாஸ் (தம்பி வயசு!). ஒரு வேலைவிஷயமாக டெல்லிக்குப் போய்விட்டு வரும் அப்பாஸ், ரொமான்ஸ் மூடுடன் செளந்தர்யாவை நெருங்குகிறார்.அப்போது கதவு தட்டப்படுகிறது.

செளந்தர்யா கதவு திறந்தால் அங்கே அப்பாஸ் நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

இவ்வளவு நேரம் தன்னுடன் பேசிக் கொண்டிருந்தது யார் என்று திரும்பி பார்த்தால், அங்கே இருந்த அப்பாஸ் மெல்ல மெல்ல ஒருவெள்ளை நாகமாக மாறுகிறார்.

இப்படி போகிறது கதை.

மாயாஜால படமாச்சே.. கவர்ச்சி வேணுமே.. அதற்காகவே படத்தில் சொருகப்பட்டிருப்பவர் அபிநயாஸ்ரீ.நன்றாகவே காட்டி நடித்துள்ளார்.

ஒரு முறை நாடகம் ஒன்றைப் பார்க்கப் போன விமர்சகர் சுப்புடு தனது விமர்சனத்தை இப்படி எழுதினார்,கதாநாயகியும் கழுதையும் வரும் ஒரு காட்சியில் கழுதை நன்றாக நடித்திருந்தது என்று.

செளந்தர்யா, நடிப்பில் பாம்பு உங்களை முந்தாம பார்த்துக்கோங்க !

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil