»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை செளந்தர்யாவுக்கு வரும் ஜூலை 26ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த கன்னட நடிகையான செளந்தர்யா தமிழில் "பொன்னுமணி" படத்தின் மூலம்அறிமுகமானார்.

அருணாசலம், படையப்பா ஆகிய ரஜினிகாந்த் படங்களிலும் தவசி, சொக்கத் தங்கம் போன்றவிஜயகாந்த் படங்களிலும் நடித்துள்ள செளந்தர்யா, தெலுங்கு படங்களிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் செளந்தர்யாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய நெருங்கியஉறவினரான கவுசிக் என்ற ஸ்ரீதர் என்பவரைக் கரம் பிடிக்கிறார் அவர். பெங்களூரில் சொந்தமாகத்தொழில் செய்து வருகிறார் ஸ்ரீதர்.

செளந்தர்யா-ஸ்ரீதர் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது. வரும் ஜூலை26ம் தேதி பெங்களூரிலேயே அவர்கள் திருமணமும் நடைபெற உள்ளது. அன்று மாலை வரவேற்புநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

""திருமணத்திற்குப் பின்னர் என் கணவர் விரும்பினால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.இல்லையென்றால் "குட் பை"தான்"" என்று செளந்தர்யா கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil