»   »  "போய்ய்ய்யா" புகழ் கீர்த்தி சுரேஷ் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா மக்களே?

"போய்ய்ய்யா" புகழ் கீர்த்தி சுரேஷ் சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா மக்களே?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவது நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் நடிகைகள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற விவரங்கள் இலைமறைகாயாகத் தான் தெரிய வரும்.

இந்நிலையில் தென்னிந்தியாவைக் கலக்கி வரும் முன்னணி நடிகைகளின், முழு சம்பள விவரமும் தற்போது வெளியாகி இருக்கிறது.

தற்போது நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகைகளின் சம்பள விவரங்களை இங்கே பார்க்கலாம்.

சுருதிஹாசன்

சுருதிஹாசன்

சம்பள விஷயத்தில் சுருதிஹாசன் 7 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். தெலுங்கு, இந்திப் படங்கள் ஹிட்டடித்தாலும் தாய்மொழியான தமிழில் இவர் தொடர்ந்து தடுமாறி வருகிறார். தற்போதைய நிலவரப்படி சுருதி ஒரு படத்துக்கு 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

தமன்னா

தமன்னா

இந்தப் பட்டியலில் 6 வது இடம் மில்க் பியுட்டி தமன்னாவிற்கு. இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 1 கோடி வரையும், ஒரு பாடலுக்கு நடனமாட 40 லட்சமும் வாங்குகிறார். மேலும் கொடுத்த நாட்களை கால்ஷீட் அதிகம் தேவைப்பட்டால் அதற்கு 20 லட்சங்கள் வரை தனியாக வாங்கி விடுகிறாராம். கடந்த வருடம் வெளியான பாகுபலி படத்திற்குப் பின் தமன்னாவின் சம்பளம் சர்ரென்று உயர்ந்து விட்டது.

த்ரிஷா

த்ரிஷா

13 வருடங்கள் தாண்டி நடித்தாலும் திரிஷாவின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை. இதனால் பட்டியலில் 5 வது இடம் பிடித்திருக்கிறார் திரிஷா. தற்போதைய நிலவரப்படி ஒரு படத்திற்கு 1 முதல் 1.50 கோடிகள் வரை இவர் சம்பளம் வாங்கி வருகிறார். முன்பு நாயகர்களை காதலிக்க மட்டுமே செய்த திரிஷா, தற்போது தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இந்தப் பட்டியலில் காஜல் பெற்றிருக்கும் இடம் 4. ஆரம்ப காலத்தில் 20 லட்சங்களை சம்பளமாகப் பெற்று வந்த காஜல் தற்போது 1 முதல் 1.50 கோடிகள் வரை சம்பளம் வாங்குகிறார். தமிழில் தடுமாறினாலும் தெலுங்கு உலகத்தில் இவரின் மார்க்கெட் நன்றாகவே உள்ளது.

சமந்தா

சமந்தா

காஜலைப் போலவே சமந்தாவிற்கும் தெலுங்கு உலகம் கைகொடுத்து வருகிறது. இதனால் படத்திற்கு 1.45 கோடிகளை வாங்கும் சமந்தா இந்தப் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

அனுஷ்கா

அனுஷ்கா

அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி என்று தொடர்ந்து ராணியாக நடித்து வரும் அனுஷ்கா சம்பள விஷயத்திலும் ராணியாகவே திகழ்கிறார். ஒரு படத்திற்கு 1.50 கோடிகள் முதல் 2 கோடிகள் வரை அனுஷ்கா சம்பளம் வாங்கி வருகிறார்.

நயன்தாரா

நயன்தாரா

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என 3 மொழிகளிலும் கலக்கி வரும் லேடி சூப்பர் ஸ்டார் இந்தப் பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 1. முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் இவரின் மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கிறது. தொடர் ஹிட்களால் 4 கோடி சம்பளம் கேட்டவர் தற்போது 3 கோடிகளை வாங்கி வருகிறாராம்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இவர்களைத் தவிர வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி சுரேஷ் ஒரு படத்திற்கு தற்போது 50 லட்சம் வரை வாங்குவதாகக் கேள்வி.ரஜினிமுருகன், இது என்ன மாயம் படங்களில் 10 லட்சத்திற்கும் குறைவாக வாங்கி வந்த கீர்த்தி ரஜினிமுருகன் வெற்றி மற்றும் தனுஷ், விஜய் பட வாய்ப்புகளால் தற்போது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். விஜய் படத்திற்குப் பின் கீர்த்தியின் சம்பளம் இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறுகின்றனர்.

பிற செலவுகள்

பிற செலவுகள்

நடிகைகளின் சம்பளம் தவிர அவர்களின் கேரவன் வாடகை மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடிகைகள் தங்கும் பில் போன்றவற்றுக்கும் தயாரிப்பாளர்கள் தான் செலவு செய்து வருகின்றனர். இதில் கேரவன் செலவே மாசம் 3 லட்சங்களைத் தொடுகிறதாம்.

English summary
South Indian Top Actresses, new Wage List Mentioned Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil