»   »  ஸ்பந்தனாவின் வியூகம்

ஸ்பந்தனாவின் வியூகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாண்ட்ஸ் பியூட்டி டால்கம் பெளடர்.. பட்டு போன்ற மேனிக்கு.. என்று தனக்குத் தானே சிரித்து பேசிக் கொண்டு ஒரு பெண் டிவியில்அங்கும் இங்கும் ஓடுவாரே.. ஞாபகம் வருதா... அவரும் கோடம்பாக்கத்துக்கு வந்துவிட்டார்.

அவர் நடிக்கப் போகும் படம் வியூகம். படத்தைத் தயாரிப்பது சென்னை ஸ்கிரீன்ஸ் என்ற புதிய பட நிறுவனம்.

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் (அலைகள் ஓய்வதில்லையில் ஆரம்பித்து சிங்காரவேலன் வரை பலபடங்களை தயாரித்தவர்) மகன் ஹரிபாஸ்கர் தான் இதில் ஹீரோ. இவரும் புதுமுகமே.

நடிப்பது ஒன்னுவிட்ட அண்ணனாச்சே, அதனால் படத்திற்கு இசை யுவன்சங்கர் ராஜா.

பூஜை போட்ட கையோடு இந்த மாதத்திலேயே டகடகவேன அஸ்ஸாம், டெல்லி, கோவை, பெங்களூர் என பல பகுதிகளிலும் காடுகளும்காடு சார்ந்த பகுதிகளில் படப் பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். சஸ்பென்ஸ்-திரில்லர் சப்ஜெக்ட்டாம்.

ஆர்.கே. செல்வமணியிடம் உதவியாளராக இருந்து கேப்டன் பிரபாகரன், புலன்விசாரணை போன்ற படங்களில் பணியாற்றியகிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் டைரக்டர் அவதாரம் எடுக்கிறார். படத்துக்கு கதை-திரைக்கதை அமைப்பதும் அவரே.

கிட்டத்தட்ட செல்வமணியின் ஆக்ஷன்- அதிரடிப் படம் போலவே இதுவும் தயாராகப் போகிறதாம். ஹீரோ ஒரு தேடப்படும்குற்றவாளியாம். 24 மாநில போலீசும் ஹீரோவைத் தேடி அலைய, அவரோ சில குற்றவாளிகளை ஒழிக்க அவர்களைத் தேடி அலைவராம்.

அவ்வப்போது இரு தரப்பும் சந்திப்பதும், மோதுவதும், ஹீரோவிடம் இருந்து வில்லன்களை காக்க போலீஸ் பாடுபடுவதுமாக கதைநகருமாம்.

ஹீரோயினுக்காக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தேடிவிட்டு கடைசியில் காஞ்சி கெளலை (காஞ்சிபுரம் இல்லீங்க.. இது பஞ்சாபி பேரு)பிடித்திருக்கிறார்கள். பெயரை ஸ்பந்தனா என மாற்றிவிட்டார்கள். இவர் தான் நாம் முதல் பாராவில் சொன்ன பாண்ட்ஸ் அழகி.

சும்மா சொல்லக் கூடாது, பாண்ட்ஸ் பெளடர் மாதிரியே பார்க்க படு ஸாப்டாக இருக்கிறார். பஞ்சாபி பெண் என்றாலும் பெங்களூரில் பிறந்துவளர்ந்தவர். சினிமாவுக்கு ஆசைப்பட்டு மாடலிங்குக்கு போனவர். ரொம்ப லேட்டாக இப்போது தான் அவர் விரும்பிய சினிமா சான்ஸ்கிடைத்திருக்கிறது.

பெங்களூர் என்பதால் கொஞ்சோண்டு தமிழ் புரியுமாம். இது போதுமே.. தமிழ் சினிமாவுல நடிக்க. (நல்லா தமிழ் பேசினா தான் பிரச்சனை,வாய்ப்பு தர மாட்டார்கள்).

இந்தப் படத்துக்குப் பின் தமிழில் ஆழமாய் காலுன்ற அசையாம், தமிழில் சாதித்துவிட்டு இந்திப் பக்கம் போகும் எண்ணமும் இருக்கிறதாம்ஸ்பந்தனாவுக்கு.

இந்தப் படத்துக்கு வசனம் எழுதப் போவது ஜான்வி. இவர் குருதிப் புனல், குணா ஆகிய படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றியவர்.

நடனம் ராஜு சுந்தரம் தான். பாடல்களை யுவன் போட்டுத் தாக்கியுள்ளதால், ஸ்பந்தனாவை இடுப்பொடியே வேலை வாங்கும் வேலைராஜு சுந்தரத்துக்கு. அவர் தான் அதில எக்ஸ்பர்ட் ஆச்சே.

படத்தை 3 மாதங்களில் முடித்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil