»   »  நடிகரின் மனைவியுடன் குடுமிபிடி சண்டையா?: உதயநிதி ஹீரோயின் விளக்கம்

நடிகரின் மனைவியுடன் குடுமிபிடி சண்டையா?: உதயநிதி ஹீரோயின் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: காவ்யா மாதவனுடன் சண்டை என்ற செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை நமிதா பிரமோத்.

மலையாள நடிகர் திலீப் அமெரிக்காவில் திலீப் ஷோ 2017 என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் அவரது மனைவி காவ்யா மாதவன், நடிகை நமிதா பிரமோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திலீப் ஷோ வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

நமிதா

நமிதா

அமெரிக்க நிகழ்ச்சியில் சிலரின் நல்லது மற்றும் கெட்டதை பார்த்தேன் என்று நமிதா மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் சொன்னதையே அந்த சேனல் திருப்பித் திருப்பி ஒளிபரப்பியது.

காவ்யா

காவ்யா

நமிதா டிவி பேட்டியில் சொன்னது திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனை பற்றி தான் என சில மலையாள செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.

திலீப்

திலீப்

காவ்யா திலீப் மீது ஓவர் பொசசிவாக உள்ளார், அதனால் எந்த நடிகை பேசினாலும் பிரச்சனை செய்கிறார். நமிதா திலீப்புடன் பழகியதை பார்த்து அவருடன் காவ்யா சண்டை போட்டுள்ளார். இதை தான் நமிதா அப்படி சொல்லியுள்ளார் என்று மலையாளத்தில் செய்திகள் வெளியாகின.

விளக்கம்

விளக்கம்

தனக்கும், காவ்யா மாதவனுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. தான் கூறியதை திரித்து செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்று நமிதா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

உதயநிதி

உதயநிதி

பிரியதர்ஷன் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் நமிதா பிரமோத். இது மலையாள படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Spat with Kavya: Namitha Pramod clears air The alleged spat of Kavya Madhavan and Namitha Pramod has been the favourite topic of Mollywood gossipmongers, from the past few days. However, Namitha finally reacted to the rumours recently, thus putting an end to the speculations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil