»   »  தெலுங்கு திரையுலகை அதிர வைத்து நினைத்ததை சாதித்த ஸ்ரீ ரெட்டி #SriLeaks

தெலுங்கு திரையுலகை அதிர வைத்து நினைத்ததை சாதித்த ஸ்ரீ ரெட்டி #SriLeaks

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தான் நினைத்ததை சாதித்துவிட்டார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது அதிகமாக உள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார்.

மேலும் அவ்வாறு படுக்கைக்கு அழைக்கும் சிலரின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட்டு திரையுலகினரை அதிர வைத்தார்.

போராட்டம்

போராட்டம்

பிலிம் சேம்பர் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நடிகர் ராணாவின் தம்பியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் ஸ்ரீ ரெட்டி.

விளாசல்

விளாசல்

சினிமாவில் உள்ள அனைத்து பெண்களுக்காகவும் போராடுவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். என்னை யாரும் படுக்கைக்கு அழைக்கவில்லை, திறமையால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய ரகுல் ப்ரீத் சிங்கை விளாசினார் ஸ்ரீரெட்டி.

குழு

குழு

ஸ்ரீரெட்டி மீதான தடையை நீக்கியுள்ளது மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன். மேலும் பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அந்த குழு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடும் என்றும் மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் அறிவித்துள்ளது.

வெற்றி

வெற்றி

தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இல்லாத போதிலும் தான் நினைத்ததை சாதித்துள்ளார் ஸ்ரீரெட்டி. பல நடிகைகள் பேச பயப்படும் விஷயத்தை துணிச்சலாக பேசி போராடி வெற்றியும் கண்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

மனு

மனு

தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று பெண் ஆர்வலர்கள் தெலுங்கானா அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை

விசாரணை

ஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அவருடன் உறவு கொண்ட ராணாவின் தம்பி அபிராம் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
Actress Sri Reddy has succeeded in her mission against casting couch in Telugu film industry. Movie Artists' Association (MAA) has announced a team to investigate about sexual harassment in the industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X