»   »  ஸாரி சொன்ன ஸ்ரீதேவி

ஸாரி சொன்ன ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தமிழில் நடிக்க வந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார். இதனால் அந்த வேடத்தில் நதியா புக் செய்யப்பட்டுள்ளார்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் சார்லி சாப்ளின். பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் ஹிட் ஆகி, ஷக்திக்கு சக்தி கொடுத்தது.

இந்தப் படத்தைப் பார்த்த ஸ்ரீதேவி தனது கணவர் போணி கபூரிடம் சொல்லி இப்படத்தை இந்தியில் தயாரிக்கலாமே என்று ஐடியா கொடுத்தார். இதையடுத்து ஷக்தியை அழைத்த போணி, சார்லி சாப்ளின் படத்தின் 2ம் பாகத்தை இயக்குமாறு கோரினார். இதை ஷக்தியும் ஏற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் இப்படம் தொடர்பாக விவாதிக்க மும்பை போனார் ஷக்தி. கூடவே, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் சென்றிருந்தாராம்.

அப்போது, தனது இயக்கத்தில் சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க அனுமதிக்க வேண்டும் என போணியிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு போணி, ஸ்ரீதேவி முழுமையாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகள் நலன், தயாரிப்பு நிர்வாகத்தில் தீவிர கவனம் செலுத்துகிறார். மீண்டும் நடிக்கும் ஐடியாவே அவரிடம் இல்லை என்றாராம்.

பரவாயில்லை என்று சென்னைக்குத் திரும்பி வந்த ஷக்தி இப்போது, நதியாவை அந்த ரோலுக்கு புக் பண்ணியுள்ளாராம்.

ஸ்ரீதேவிக்கு வயது போன பின்னரும் கூட பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது படு சிக்கென டிரஸ் அணிந்து செக்ஸியாகத்தான் வருகிறாராம். இதை மும்பை பத்திரிக்கைகள், ஸ்ரீதேவியிடம் இன்னும் நிறைய இளமை மிச்சமிருப்பதாக பரவசப்பட்டு எழுதித் தள்ளி வருகின்றதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil