»   »  ஸ்ரீதேவி ரீ என்ட்ரி !

ஸ்ரீதேவி ரீ என்ட்ரி !

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி தனது கணவர் போணி கபூரின் இந்திப் படம் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

அந்தக்கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக இந்தியா முழுவதும் தனது ரசிகர் பட்டாளத்தால் அசத்தியவர் ஸ்ரீதேவி. தென்னகத்தை முதலில் கலக்கிய அவர் பின்னர் பாரதிய நாரியாக மாறி இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர்.

தெற்கே ரஜினி, கமல், என்.டி.ஆர், கிருஷ்ணா தொடங்கி இந்தியில் அமிதாப் பச்சன் உள்பட, கிட்டத்தட்ட இந்தியாவின் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ஒரே நடிகை ஸ்ரீதேவியாகத்தான் இருக்க முடியும்.

கனவுகளுக்கும் ஒரு முடிவு உண்டு இல்லையா. அது போலவே, ஸ்ரீதேவியின் நான் ஸ்டாப் திரையுலக வாழ்க்கைக்கும் முடிவு வந்தது. ரிடையர்ட் ஆனார் ஸ்ரீதேவி. ஏற்கனவே கல்யாணமான போணி கபூரை மணந்து கொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார்.

இடையில் டிவி சீரியில் நடித்தார். அவ்வப்போது விளம்பரங்களிலும் வந்து போனார். இந்த நிலையில் மீண்டும் சினிமாவுக்குத் திரும்புகிறார்.

ஸ்ரீதேவியின் ரீ என்ட்ரி கணவர் போணி கபூர் மூலமாகவே நடக்கவுள்ளது. ஸ்ரீதேவிக்காக போணி கபூர் ஒரு இந்திப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் ஸ்ரீதேவி.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் ஆகஸ்ட் மத்தியில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து போணி கபூர் கூறுகையில், ஸ்ரீதேவியின் ரீ என்ட்ரி படம் குறித்து தீவிரமாக யோசித்து வருகிறோம். இப்போதுதான் நான் அமெரிக்காவிலிருந்து திரும்பியுள்ளேன்.

இந்தப் படத்துக்காக அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் சில லொகேஷன்களைப் பார்த்து வைத்து்ள்ளேன். படத்துக்கு இந்த லொகேஷன்கள் அழகூட்டும்.

ஸ்ரீதேவியை ரசிக்க இன்னும் லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்துள்ளனர். அவர்களுக்கு சந்தோஷம் தரும் வகையில் இந்தப் படம் அமையும் என்றார்.

இதற்கிடையே ராஜ்குமார் சந்தோஷியின் புதிய படமான ஹலா போல் திட்டமிட்டுள்ளார். இதுதவிர தமிழில் கமல்ஹாசனுடன் மீண்டும் நடிக்கும் வாய்ப்பும் ஸ்ரீதேவிக்கு வந்துள்ளது. பி.வாசு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கமலுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைகிறார் ஸ்ரீதேவி.

தமிழில் ஸ்ரீதேவி நடித்த கடைசிப் படம் தேவராகம். ஆனால் இது கூட முதலில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் டப் ஆன படம்தான்.

மறுபடியும் வரும் மயிலு மயக்குவாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil