»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியத் திரையுலகின் கனவுக் கன்னி ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்த் திரைக்குவருகிறார்.

சிறிய வயதிலிருந்தே ஸ்ரீதேவியின் பரம ரசிகரான நடிகர் விஜய், தன் படங்களில் ஏதாவது ஒன்றில் ஸ்ரீதேவியைநடிக்க வைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே நினைத்துக் கொண்டிருந்தாராம்.

இதையடுத்து சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ஒரு படத்தில் ஸ்ரீதேவி நடிக்கப் போகிறார். அநேகமாகஇப்படத்தில் விஜய்க்கு அக்காவாக அவர் வருவார் என்று தெரிகிறது. படத்தைத் தயாரிக்கப் போவதே ஸ்ரீதேவிதான் என்கிறார்கள்.

அதற்கு முன்பாகவே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் நடிக்கும் "ஜானி" என்ற படத்தில்ஒரு கெஸ்ட் ரோல் மூலம் தென்னக திரையுலகில் ஸ்ரீதேவி "ரீ-என்ட்ரி" ஆகிறார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்படுகிறதாம். ஸ்ரீதேவிக்கும் நன்றாகவே காமெடி வரும்என்று கூறி அவரையும் நடிக்க வைத்துள்ளார் சிரஞ்சீவி.

ஸ்ரீதேவி மீண்டும் நடிப்பதற்கு அவரது கணவர் போனி கபூர் ஒகே சொல்லி விட்டாராம். தனது படத் தயாரிப்புநிர்வாகத்தில் ஸ்ரீதேவிக்கு மிக முக்கிய இடம் தந்துள்ளாராம் போனி கபூர். சத்தம் போடாமல் தமிழ் உள்பட பலதென்னிந்தியப் படங்களுக்கு ஸ்ரீதேவி பைனான்ஸ் செய்து வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil