Janhvi Kapoor Home Tour: அடேங்கப்பா ஜான்வி கபூரின் ஆடம்பர டூப்ளெக்ஸ் பங்களா இத்தனை கோடியா?

மும்பை: மும்பையின் ஆடம்பரமான பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள நடிகை ஜான்வி கபூரின் டூப்ளக்ஸ் வீட்டை சமீபத்தில் சுற்றிப் பார்த்த இயக்குநர் ஃபரா கான் வெளியிட்ட வீடியோ மூலம் ஜான்வி கபூர், போனி கபூர் மற்றும் அவரது சகோதரி குஷி கபூர் வசித்து வரும் 65 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர சொகுசு பங்களா குறித்த பல விஷயங்கள் ரசிகர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

இந்த வீடு ஆடம்பரத்தையும், குடும்ப பாரம்பரியத்தையும், தனிப்பட்ட அன்பையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. ஜான்வியின் இந்த ஆடம்பர பந்த்ரா டூப்ளக்ஸில், ஏகப்பட்ட பார்ட்டிகள் மற்றும் ஃபங்க்‌ஷன்கள் களைகட்டி வருகின்றன.

Sridevi daughter Janhvi Kapoor s 65 crore rs duplex bungalow home tour

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், தற்போது டோலிவுட்டில் தேவரா படத்தை தொடர்ந்து ராம்சரண் உடன் இணைந்து பெத்தி படத்திலும் நடித்துள்ளார். மேலும், இந்தி படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவரது நடிப்பில் விரைவில் பரம் சுந்தரி படம் வெளியாக காத்திருக்கிறது.

ஸ்ரீதேவியின் மூத்த மகள்: தயாரிப்பாளர் போனி கபூரை நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்துக் கொண்டார். ஏற்கனவே போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்த அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு அவரது மூத்த மகளான ஜான்வி கபூர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இளைய மகள் குஷி கபூரும் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். அப்பா போனி கபூர் மற்றும் தங்கச்சி குஷி கபூருடன் மும்பையில் சொகுசு டூப்ளக்ஸ் பங்களாவில் வசித்து வருகிறார் ஜான்வி கபூர். அந்த வீட்டின் ஹோம் டூரை இங்கே பார்க்கலாம் வாங்க..

65 கோடிக்கு ஆடம்பர பங்களா: பாலி ஹில்லின் உயர்தரப் பகுதிகளில் அமைந்துள்ள இந்த ₹65 கோடி மதிப்புள்ள ஆடம்பர டூப்ளக்ஸ் பங்களா, ஒரு சிறந்த சொத்தை விட அதிகம். இது 8,669 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்த கட்டிடக்கலை நேர்த்தியையும், தனிப்பட்ட அன்பையும் ஒருங்கிணைக்கிறது. உயரமான கண்ணாடி சுவர்கள், தனிப்பட்ட பசுமையான தோட்டம், மற்றும் கலைப் படைப்புகள் ஆகியவை ஜான்வியின் இரண்டு அடையாளங்களைச் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன: அதாவது, வளர்ந்து வரும் பாலிவுட் நட்சத்திரமாக இருப்பதும், குடும்ப பாரம்பரியத்தில் வேரூன்றியிருப்பதும் ஆகும்.

பழைய வீட்டை விற்றுவிட்டு: இந்த வீடு பாலி ஹில்லில் உள்ள குபேலிஸ்க் கட்டிடத்தில் அமைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு, ஜான்வி கபூர் தனது ஜூஹூ ட்ரிப்ளக்ஸ் வீட்டை பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவுக்கு விற்ற பிறகு, இந்த டூப்ளக்ஸ் வீட்டை வாங்கினார். இது முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் அமைந்துள்ளது.

வீட்டில் இவ்ளோ விஷயம் இருக்கா?: உட்புற வடிவமைப்பு நவீன நேர்த்தியையும், உணர்வுபூர்வமான அழகையும் ஒன்றிணைக்கிறது. லிவ்விங் ஏரியா காற்றோட்டமாகவும், வெள்ளை சுவர்கள், தங்க நிற அலங்காரங்கள், மற்றும் ஒரு சுழல் படிக்கட்டுடன் அட்டகாசமாக உள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பல நினைவுகளை பிரதிபலிக்கும் பரிசுப் பொருட்கள் அனைத்தும் இந்த வீட்டில் அலங்காரப் பொருட்களாக மட்டுமின்றி பல கதைகளையும் சாதனைகளையும் சொல்லும் விதமாக வைக்கப்பட்டுள்ளது சிறப்பு. குஷி கபூரின் ரசனைக்கேற்ப அவரது பெட்ரூம் மற்றும் தனிப்பட்ட அறைகள் உள்ளன. மிகவும் வசதியான அறையாக ஜான்வி கபூரின் பெட்ரூம் உள்ளது. வெளியே தோட்டங்களும், அழகான ஒரு நீச்சல் குளமும் அதன் அருகே பார்ட்டி நடத்தவும், பார்பிக்யூ சமைத்து சாப்பிட்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கக் கூடிய அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளார் ஜான்வி கபூர். விரைவில் வெளியாகவுள்ள அவரது பரம் சுந்தரி மற்றும் பெத்தி படங்கள் அவருக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X